என் முகம் அறியும் முன்பே
என் எதிர்காலத்தைப் பற்றி சிந்தித்தவள் 💭.
நான் துவண்டு விழும்போது தூக்கி
நிறுத்தும் ஊன்றுகோல் அவள்.
ஊதியம் இல்லா பணிக்காக
உறங்காமல் உழைப்பவள்.
என் நோய் தீர்க்கும் மருத்துவர் அவள்.
என் இன்பத் துன்பங்களில் உடன்நிற்க்கும் உயிர்தோழி அவள் 👩❤️👩.
தன் குழந்தைகளுக்காக தன்
கனவுகளைத் தியாகம் செய்தவள் 👨👩👧.
தான் பட்ட கஷ்டம் தன் குழந்தைகள் படாமலிருக்க
தினமும் தன்சக்திக்கு மீறி உழைப்பவள் 💪.
ஏன் பிறந்தோம் என்று நினைக்கும் பொழுது மறவாமல் வந்து செல்கிறது நீ படும் துன்பம் 😢.
எனக்கு யாரும் இல்லை என்று நினைக்கும் நொடியே
எனக்காக என் அன்னை இருக்கிறாள் என்றது என் மனம் ❤️.
என் அன்னையைப் பற்றி எழுத வார்த்தைகளுக்கு இடையே நடந்த போரைக் கண்டு 🔪🔫
தமிழ் அன்னையே திகைத்து நிற்கிறாள் 😱.
-
அன்னை கருவறையில் சுமர்ந்த நாட்களை விட,
நீங்கள் தோளில் சுமர்ந்த நாட்களே அதிகம்👶.
உங்கள் அடிப்படைத் தேவைகளைத் தியாகம் செய்து,
என் தேவைகளை நான் கூறாமலே நிறைவேற்றினீர்கள்.
கடின உழைப்பால் என் கல்வி தரத்தை உயர்த்திய ஆசான் நீங்கள்🎓.
நான் கேட்காமலே இறைவன் தந்த வரம் நீங்கள்🙏.
நான் எழும் முன்பு பணிக்குச் சென்று நான் உறங்கியப் பின்பு வருவதால் தான்
உங்களின் வலிகள் எனக்கு தெரியாமல் போனது😢.
நான் காணும் ஒவ்வொரு மகிழ்ச்சிக்கு பின்னால் என் தந்தையின் ஆயிரம் வலிகள் மறைந்திருக்கிறது😞.
பல கைகள் என்னை சுட்டிக்காட்டினாலும்👉👸,
நீங்கள் என் மீது வைக்கும் நம்பிக்கையை மட்டும் மாறாது.
நான் நம்பிக்கை கொள்ளும் முதல் ஆண் நீங்கள்👤.
பருவங்கள் பல கடந்தாலும் என்றும் மாறாத பந்தம் நீங்கள்👨👩👧.
அன்னையை எதிர்த்து வாதாடினாலும் தந்தையை எதிர்த்து வார்த்தைகள் வருவதில்லை.
அதற்கு காரணம், உங்கள் மீதுள்ள பாசமா, பணிவா, இல்லை பயமா என்று எனக்கு தெரியவில்லை🤗.
அன்னை பற்றி எழுத ஆயிரம் கவிகள் எழுந்தாலும்✍️,
தந்தையை பற்றி கவிபுனைய சிறு தடுமாற்றம் ஏனோ என் தமிழன்னையே!!!
-
கல்லூரியில் கால் பதித்த முதல்நாள் அன்று,
கண்கள் தேடியது எங்கே அமர்வதென்று.
இடம் கிடைத்து அமர்ந்த பின்பு,
அறிமுகமானது முதல் தோழியின் நட்பு.
முதல் தேர்வின் பயத்தினை நீக்கி,
தேர்ச்சி பெற வைத்தது அவளின் பயிற்சி.
நண்பர்களுடன் இணைந்து,
நாட்கள் பல கடந்து,
நினைவுகளை சுமர்ந்து நிற்கிறது,
கல்லூரியின் இறுதி நாட்களாக இன்று.
வழியனுப்பும் நாள் அன்று,
வார்த்தைகள் இன்றி வழிகிறது கண்ணீர் இங்கு.
மனம் ஏங்கி தவிக்கிறது
மீண்டும் அமர வாய்ப்பு கிடைக்குமோ
குழந்தையாய் கருவறையிலும்,
மாணவியாய் வகுப்பறையிலும்...-
இந்த உலகில் நாம் திரும்ப பெற முடியாத ஒன்று நம் உயிர் மட்டுமே👸.
இதன் மதிப்பை அறியாத சிலர்,
சாலை விதிகளைக் கடைபிடிக்காமல் விபத்தில் தன் விதிக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுகின்றனர்😢.
அதனால், வாகனத்தில் செல்லும் பொழுது உங்களுக்காக வாழ்பவரை ஒரு கனம் நினைத்து பாருங்கள்💭.
இன்னும் சிலர், வாழ்வில் நிகழும் சிறு தோல்விகளுக்காகத் தம் உயிரையே மாய்த்துக்கொல்கின்றனர்😢.
இறப்பதற்கே ஆயிரம் வழிகளைத் தேடுபவர்களுக்கு,
வாழ்வதற்கு ஒரு வழி கூடவா இருக்காது😕???
வாழ்க்கை என்பது ஒருமுறை தான்.
அதில் வெற்றியோ, தோல்வியோ இரண்டையும் ஏற்க பழகுங்கள்.
ஏனெனில், இவ்விரண்டும் நிலையானது அல்ல.
மாற்றம் ஒன்றே மாறாதது☺️.
-
தூக்கம் இன்றி போராடியவர்களுக்கு
துக்கம் தான் மிஞ்சியது.
உணவின்றி போராடியவர்கள்
உயிரையும் தியாகம் செய்துவிட்டனர்.
உப்பிற்கு பெயர்பெற்ற பூமி - இன்று
உலோகத்திற்காக விலைபோகலாமா???
சுவாசிக்கும் காற்றும் இங்கு
சூனியம் ஆகி விட்டது.
ஆலைக்கு எதிராய் எழுந்த குரல்
அமைதியின்றி தவிக்கிறது.
பயிர்களை தாங்கிய கலங்கள்- இன்று
பணத்திற்க்காக புகைப்பிடிக்கும் கட்டிடங்களைத் தாங்கி உள்ளது.
"காப்பர் உனக்கு கேன்சர் எனக்கா" என்று
வீதியில் போராடியவர்களுக்கு நீதியும் இல்லை நாதியும் இல்லை.
காக்க வேண்டியவர்களே
காலனானது ஏன்???
எழுந்த எண்ணங்களை எழுத்துக்களால் வரைந்துவிட்டேன் ;
என் மண்ணிற்கு நீதி கிடைக்கும் என்று...-
அன்பிற்கு இலக்கணமான அன்னைபோல் திகழ்ந்து
ஆறுதல் மொழியால் என்னை அரவணைத்து
இரவுபகல் பாராமல் இன்பத் துன்பங்களில்
ஈன்று எடுத்த தாய்தந்தை போல்
உடன் நின்று, உரிய நேரத்தில்
ஊக்கம் கொடுத்து உயர்நிலை அடையசெய்து
எளிமையால் என் இதயத்தினை ஈர்த்து
ஏணிபோல் நின்று என்னை உயர்த்தி
ஐயம் எழும் பாடங்களில் எல்லாம்
ஒன்றுக்கு பலமுறை ஓயாமல் சொல்லிகொடுத்து
ஓர் நாளில் நம் தோழமையும்தான்
ஔவை அதியமானின் நட்பை போன்றே
இவ்வையம் உள்ள வரை வாழ்ந்திடுவோமே...-