சொல்லாமலே போகிறேன்
கவிதையை மட்டுமல்ல,
என் காதலையும்-
23 FEB 2024 AT 10:37
மனதின் ஓரம் சிறு வருத்தம்தான்.என்ன செய்ய!கொண்டாட்டங்களும் கேளிக்கைகளும் கால வளையத்திற்கு உட்பட்டதுதானே!
-
28 JAN 2024 AT 15:35
ஒரு பாட்டில் சாராயம் பலருக்கு;ஒரு குவளைத் தேநீர் எனக்கு.சண்டை போட வேண்டும் கோபக்காரர்களுக்கு;
உன்னுடன் ஒரு உரையாடல் போதும் எனக்கு.
நீண்ட பயணம் போவார்கள் பலர்;உன்னோடு நடக்கும் சில தூரம்தான் எனக்குத் தேவை.
பரிசுகள் வேண்டும் பலருக்கு;பதட்டப்படுத்தாத உனது புன்னகை இருக்கையில் அது எதற்கு.பாடல்கள் கேட்பார் பலர்;உனது கொஞ்சல் பேச்சை விரும்புவேன் நான்.இன்ப அதிர்ச்சி தேவை ஏராளமானோருக்கு;இதழ் முத்தமோ எனக்கு.நீ தந்த வலி உன்னிலே மறைந்து போவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
-
14 JUN 2023 AT 10:39
சில நீர்த்துளிகள் எட்டிப் பார்க்கிறது நினைவுப் பெட்டியைத் திறக்கும்போது
-