காணாமல் போய்விடுகிறேன் உனைப்பார்த்தக் கொஞ்ச மாத்திரத்தில்!
-
ஒரு பாட்டில் சாராயம் பலருக்கு;ஒரு குவளைத் தேநீர் எனக்கு.சண்டை போட வேண்டும் கோபக்காரர்களுக்கு;
உன்னுடன் ஒரு உரையாடல் போதும் எனக்கு.
நீண்ட பயணம் போவார்கள் பலர்;உன்னோடு நடக்கும் சில தூரம்தான் எனக்குத் தேவை.
பரிசுகள் வேண்டும் பலருக்கு;பதட்டப்படுத்தாத உனது புன்னகை இருக்கையில் அது எதற்கு.பாடல்கள் கேட்பார் பலர்;உனது கொஞ்சல் பேச்சை விரும்புவேன் நான்.இன்ப அதிர்ச்சி தேவை ஏராளமானோருக்கு;இதழ் முத்தமோ எனக்கு.நீ தந்த வலி உன்னிலே மறைந்து போவதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
-
ஓர் பயணம்
வழி நெடுகிழும் எத்தனையோ மேடுபள்ளங்கள்.ஆங்காங்கே சிற்றுண்டி கடைகள்;சிறுசிறு தேநீர் கடைகள்.அழகான வயல்வெளிகள்.காற்று விர்ரென்று ஓடுகிறது.பரபரப்பான அன்றாட வாழ்க்கையிலிருந்து தப்பித்துக்கொண்ட நிம்மதி.புது மனிதர்கள்;புதுப்புது அனுபவங்கள்;இப்படிக் கொஞ்ச நாள் தொலைந்துபோகத்தான் அடிக்கடி மனம் ஆசை கொள்ளும். அப்படி என்ன செய்துவிடும் ஒரு பயணம்?நினைவுகளையும் கற்றல்களையும் நிறைய கொடுக்கும்.பயணித்துப்பார்.-
கண்களுக்கு மறைவாக ஒளிந்திருக்கத்தான் கொஞ்சம் ஆசை.காத்திருக்க அல்ல;என்னைத் நோட்டமிடும் உன் தேடலை ரசிப்பதற்காக......
-
வானம் காவி உடை அணிந்து தன் மேனியைப் போர்த்தியிருந்தது.சூரியன் முழுவதுமாக கடலுக்குள் முழுகப்போனது.ராகம் போட்டுக்கொண்டிருந்தது கடல்.காற்றோடு வந்தது பூ வாசனை;அதனூடே சேர்ந்தது அவளின் யோசனை.நுரைத் ததும்பும் கடல்நீர் கால்களை நனைக்கும்போது குளிர்வது நெஞ்சமும்தான்,அவள் கை பிடித்திருக்கும்போது.
சிறுபுன்னகையோடு காந்தப்பார்வை பார்ப்பாள்;நெஞ்சம் கொள்ளைப் போய்விடும்.சின்னச்சின்ன பேச்சுகளில் கொஞ்சம்கொஞ்சமாக மனதைப் பறிகொடுப்பதில்தான் என்ன ஒரு இனிமை!-
ரம்மியமான மாலை
ரேடியோவில் 90களின் இசை
இதமான ஒரு குவளைத் தேநீர்
மாலை இன்னும் அழகாகிறது
அவளோடு அருந்தும்போது.....-
வறண்ட பூமிக்கு உயிர் கொடுக்க தனது ஆழ்ந்த அனுதாபங்களை சொல்லிவிட்டுப் போகிறது மழை
-
காதல்கடிதம்
எத்தனையோ எண்ணங்களை என்னுள் கடத்தும் உனைப்பற்றி ஒரு மடலில் எப்படி எழுதுவேன்!-
அத்தனை பிரச்சனை!
அப்படி என்ன பிரச்சனை?
அவ்வப்போது கண்கள் தெரிகிறது
ஏதேனும் பிரம்மையாயிருக்கும் அல்லது பேயாயிருக்கும்
இல்லை மோகினி.அகலாமல் தொல்லை செய்யும் உனது காந்தவிழிகள்
😌🙃😍.......-