📷புகைப்படம்📷
மொழிகள் கொண்ட மௌனம் நீ...👒
கருவிழிகள் கண்ட ஜனனம் நீ...👀
உயிரைக் கடந்த கடமையும் நீ...🐾
மதியை மயக்கும் மடமையும் நீ...🏆
எனக்கு__உன்னுள் மரணம்...
உமக்கு__என்னில் ஜனனம்...🎁
அழகிய ஜடமே....👑
மரணிக்கவும் தோணுதடி
உன் போல் மீண்டும் எழ வாய்ப்பு கிடைத்தால்🌷-
13 DEC 2019 AT 12:56
13 MAY 2021 AT 10:54
Preeti shenoy
அழகென உருவம் உன் எழுத்தில் கண்டேன்....
அதனால் தானே எம் வார்த்தைகள் கொண்டேன்....
உன் பிம்பம் காணத் தோணவில்லை..
உன்னிடம் தோற்றுப் போக ஆசையில்லை...
கட்டுக் கதையாய் ஆக்கவில்லை...
உன் கதையை மறைக்க நினைக்கவில்லை...
உன் வரிகள் கேட்டு............
மேல் ஓங்கும் கால்கள் ஓய்வதில்லை...
செவிகள் சாய்க்க மறுப்பதில்லை....
குறைகளைக் கண்டு கொள்வதில்லை....
நிறைகளைக் கொண்டு துவர்ப்பதில்லை...
உன்னால் எழுத்து உயிர்ப்பதைக் கண்டு...
உனக்கென கவியைப் படைத்தேன் ஒன்று...
எனத்தான் நன்றியை மொழிவேன் என்றும்...-