எனக்கு
எந்தவித
பிரச்சனையும்
இல்லை
எல்லோரும்
எனக்கு
உதவி
செய்வார்கள்
என்று
அழகானவர்களால்
அதிகமாய்
சொல்லிக்கொள்ள
முடிகிறது-
அந்தக் காலத்தில் தேவர்கள் அசூரர்கள்
இரண்டு வகை இருந்தனராம்..!!
பேசிக் கொண்டிருக்கும் பொழுது
சொல்லிக்கொள்ளாமல்
அழைப்பை துண்டிப்பவர்களையும்
அசூரர்களின் பட்டியலில்
சேர்த்து விடலாம்...!!!-
ஊரடங்கு தளர்வில்
அலைமோதியது
கடைகளில் கூட்டம்
"கம்மல பாத்துட்டு
காசுகொடு சேட்டு
கடை மூடறதுக்குள்ள
பொருளை வாங்கனும்"
அலைமோதிய
கடைகளில்
அடகு கடையும் ஒன்று!-
நீ என் மனதை
படிக்க
கற்றுக் கொண்டால்
யோசித்து
யோசித்தே
உன்னை
வெட்கம் கொள்ள
வைத்திருப்பேன்!!-
கண் விழிக்கும் போது
கைப்பிடித்து எழுப்பி
முத்தமிட்டு
சட்டென சாய்த்து
மேல்விழுந்து
கொஞ்சுகின்றன
உன் நினைவுகள்
ஒரு செல்லப்பிராணியைப்
கொஞ்சுவது போல்!!-
பரிசாகத் தருகிறேன்
பெருமையுடன்
அணிந்துக்கொள்
உன் அகங்காரங்களுக்கு
அணிகலன்களாக....!!!
(அகங்காரம் = ego)-
காலணி அறுந்த போது
சாலையோர
நடைபாதையில்
தெய்வம் போல
தெரிகிறார்
காலணி தைக்கும்
கலைஞர்...!
தைத்து முடித்த பிறகு
மனிதராகிவிடுகிறார்
பேரம் பேசத்
துவங்குகிறோம்!-
Like போட தாமதமானதால்
சண்டை போடும் கூட்டம்
கிடைக்க பெற்றவர்கள்
செயலிகளால்
ஆசிர்வதிக்கப்பட்வர்கள்
( செயலி - APP)-