QUOTES ON #ARUVI

#aruvi quotes

Trending | Latest
25 MAR 2022 AT 16:41

யோகாவும்
தியானமும்
தராத மனஅமைதியை
தந்து விடுகிறது
சில்லென்ற காற்று
கன்னம் வருடும்
ஜன்னலோர பயணம்..!

-


12 MAR 2022 AT 11:38

உள்ளத்தின் இருளினுள்
உலர்ந்து உறைந்துபோன
உணர்வுகளை
மயிலிறகால்
தூரிகையிடும்...
தனிமை நினைவுகள்

-


20 FEB 2022 AT 13:32

Never say busy to the one who actually need you, it really hurts them a lot..— % &

-


21 MAR 2022 AT 11:52

எங்கு
என்பதை விட
யாருடன்
என்பதிலே தான்
பயணத்தின் இனிமை
நிறைந்துள்ளது..

-


7 MAR 2022 AT 13:48

கனங்கள் தோறும்
முத்தமிடும் மழையிடம்
ஒப்பு கொடுக்கும்
இயற்கையாய்
உன்னில் நான்...

-


20 MAR 2022 AT 13:23

சோதனைகள்
பல கடந்த சாதனை
என்பது எனக்கு
உன் கரம் பற்றி
தோள் சாய்வதே!!!

-


4 MAR 2022 AT 15:49

அள்ளி வந்த
நீர் பூங்கொத்துகளை
வாரி இறைத்து
சென்ற மேகமே..
காத்திருக்கிறேன்
மீண்டும்
வருவாயோ..🌧️

-


12 MAR 2022 AT 9:23

உதிர்ந்து போன காதலில்
உறை பனியாய்
சேமித்த நினைவுகள்
உயிர்ப்போடே
உள்ளன...

-


7 MAR 2022 AT 15:39

நடுசாம மழையின்
சத்தம்...
உனை அருகில் கேட்டு
உறக்கம் கலைக்குமே
நித்தம்...

-


4 MAR 2022 AT 14:41

ரசிக்க மனமில்லா
பொழுதுகளில்
கோடை கால
சாரல் மழையும்
நசநசப்பாகவே
தோன்றுகிறது...

-