QUOTES ON #365நாள்_முத்தான365பதிவுகள்

#365நாள்_முத்தான365பதிவுகள் quotes

Trending | Latest
3 JUL 2021 AT 8:20

Day - 177
jun - 27

நிர்வாணங்களுக்கு கண்ணில்லை
தன் அவமானங்களை பார்த்து
அழுவதற்கு......

அதுபோலத்தான் ஏழையின் நிலை...
இயலாமையின் இறுதிக் கட்டம்!!!

-


6 JUL 2021 AT 14:58

Day - 183
jul - 3

மனிதனின் நிறங்கள்
மனிதம் பிரதிபலிக்கும்
காரணிகள்!!!

அறிவதும் அழிப்பதும்
அவனவன் குற்றம்
காணும் சுற்றத்தை பொறுத்தே!!

-


3 JUL 2021 AT 8:14

Day - 176
jun - 26

கருவறை சிலைக்கும்
இருட்டறை கருவின் குழந்தைக்கும்
இறுதியாகத்தான் கண் திறக்கப்படும்.

மனிதனின் அறிவுக்கண்ணும் அப்படித்தான்!!!!

-


6 JUL 2021 AT 5:45

Day - 180
jun - 30

உறவுகளிடன்
விட்டுக் கொடுத்து வாழாத
எந்த ஒரு வாழ்வும் நீடித்த நிம்மதியில்
பயணிக்காது.

-


2 MAY 2021 AT 5:48

Day - 114
Apr-25

உற்ற துணையின் தவறை
மன்னித்து வாழாதே
மறந்து வாழ்!!!!

-


4 JUN 2021 AT 9:02

Day - 153
jun - 3

முன்னோர்களே நாம் வணங்கும் முழுமையான மனிதர்கள்

-


27 MAY 2021 AT 5:38

Day - 146
May - 27

எத்தனை கதவடைத்து உள் நின்றாலும்
தீய எண்ணத்தின் பிடி விட்டு
வெளிவரவில்லையெனில்.....
உன் அழிவு உறுதி!!!!!

-


22 JUN 2021 AT 14:49

Day - 171
jun - 21

நெருங்கிய வீடுகளில்
அறிமுகமாகாத முகங்கள்...
தற்போதைய நாகரிகம்!!!!

-


4 JUN 2021 AT 8:59

Day - 152
jun-2


சரித்திரம் படைத்தவரே இங்கு முன்னோர்கள்

-


31 AUG 2021 AT 3:15

Day - 221
Aug - 10

கசங்கிவிட்ட காகிதத்தின் எழுத்துக்களே பெரும்பாலும்
கவிஞனை விழிக்கச் செய்கின்றது!!!

-