3 SEP AT 19:51

இல்லாத ராகம் ஒன்றில் ஏராளத் தாளமே ,
அல்லாத மோகம் கெஞ்சும் உன் தீண்டலே ,
மென் மெல்ல மேனி தீண்ட ஊற்றாகும் காதலில்
என் உள்ளம் மையல் கொள்ளும் உன் வாசத்தில் !

7 : 51 PM
3/09/2025

-


2 SEP AT 22:46

இனிமைத் தூறும்
இளமைத் தீண்டும்
இதயம் துள்ளும்
எல்லாம் அன்பின் மாயம் !

10: 44 PM
02/09/25

-


2 SEP AT 16:31

உனக்கானதை நிச்சயம்
உன்னிடத்தில் கொண்டு
சேர்க்கும் காலம், உனக்கல்லாததைக் காலத்தின் பாதைக் காட்டுவதுமில்லை !

4:30 PM
02/09/2025

-


2 SEP AT 9:22

கடத்திச் செல்லல்
என்பது,

விடுவிக்காத
ஆன்மாவை
விலகவுதாகவே
நிகழ்கிறது!

9 : 22 am
2/9/25

-


2 SEP AT 9:04

ஒரு இலையை காதல் செய்யும் சிறு மண் துகளாய் மாறிடல் போதும் ,

ஒட்டிக் நிமிடத்தின் ஓராயிரம் கவியாய் கோடுகள் உள் கவிதையில் நான் !

9:04 am
2/9/25. .

-


2 SEP AT 9:01

கொதிநீர் சுகம்
கொஞ்சம் பனங்கட்டி
கொஞ்சமாய் காரம்
அந்த இல்லாமை
இருப்பின் நிறைவு
சுடுநீரில் நிறைவு தான் !


9:00 am
2/9/25

-


2 SEP AT 8:57

பிழைத்துக் கிடக்கட்டும்
என் காதல் ,
உன் நிழலும்
நெருங்கினால் ,
நிலை குலைதல் தாங்காத மனம் !

சொல்லாதக் காதல் ,
ஒரு வகை அநாதைக் காதல் தான் !
8:56 am
2/9/25

-


30 AUG AT 22:16

காலைக்கு இரக்கம்
அதிகம் தான்
கண்ணாடிப் பாதரசத்தில்
பதித்து வைத்து
நாளும் காட்டுகிறது
என் கடமையை ,
மூச்சுவிட்டு
விழிக்கிறேன் !

30/08/2025
10:15 pm

-


30 AUG AT 22:11

கற்றுக் கொண்டதைக் கடந்து புரிந்துக் கொண்டது ,

யார் வேண்டுமானாலும் எழுதலாம் என்று !

-


30 AUG AT 22:08

சொல்லப்பட்ட முழு இன்பம்
அவள் ,

எல்லாமுமாக !

-


Fetching இயல் Quotes