விதைத்தது எதுவோ
விளைந்ததும் அதுவே
என்ற எண்ணமோ
சில சமயங்களில்
மர்மம் நிறைந்த
மாற்றத்தையும் தருகிறது
மனதினில் பல
ஏக்கத்தையும்
வளர்த்து விடுகிறது...!-
கண்கள் கூட
சில நேரங்களில் குளமாகும்
தோல்வியினால் மட்டுமல்ல
வெற்றியினாலும் கூடத்தான்
எதிர்த்து போட்டியிட்டவன்
நண்பனாகவோ இருந்தால்
அக்கணத்தில்
கண்ணீரும் மிக கணமாகும்...-
மீண்டும் எப்போது சந்திப்போம்
என்ற ஆழ் சிந்தனை
ஒன்றே போதும்
அவள் மேல் உள்ள பிரியும்
இவ் உலகை விட மேலானது
என் உயிரிலும் அவள் கலந்து
விட்டால் என்று....!-
ஆயிரம் கவிதைகள்
எழுதினாலும்
என்றோ எழுதிய
ஓர் கவிதை
உள்ளதை ரணமாக்கும்
உளறளால் உயிர்
பெற்ற வார்த்தைகளால்...!-
என் புன்னகை
பூக்களை
இவ்பூவுலகில்
உதிர்க்கிறேன்
சூடி கொள்ள
நீ மட்டும்
இருப்பதால் தான்...-
என்னோடு நீயும்
கவி பாடும் நேரம்
காதல் கணைகள்
பரிமாறும் காலம்
உன்னோடு நானும்
நடக்கின்ற பாதை
முடிவிலாது நீளும்
மனதின் காதல்
கரைபுரண்டு ஓடும்...-
தேடும் இடத்தில்
அமைந்ததோ உண்மையான நட்பு
உயிரில் கரையாமல்
காற்றில் கலந்ததோ
இன்பத்தில் கூடி
துன்பத்தில் விலகும்
உதட்டளவே புன்னகையும்
உயிர்ப்பில்லாத நெஞ்சமும்
வைத்ததோ நட்பை
தேடும் இடத்தில்...-
நீ பார்த்த பார்வைக்கொரு
பதிலாய் திறந்ததோ
என் இதய கதவு?
உன் வருகைக்காய்
காத்திருக்கும்
வசந்தமாய்...
என் வாழ்வு
உனக்கான அர்ப்பணமாய்...-
போகும் பாதையெல்லாம்
நிழல் தந்த மரங்கள்,
பூக்கள் தூவி சாலையை
சோலையாக்கும் நண்பர்கள்
சாலையோர சிறு வியாபாரிகளின்
இருப்பிடங்கள்
ஆக்ஸிஜெனை பரிமாறும்
நலன் விரும்பிகள்
இயற்க்கை நமக்கு
அளித்த அன்னைகள்...-
எண்ணமெல்லாம் நீயே இருக்கிறாய்
கருத்தினில் நிறைகிறாய்
கவிதைகள் வரைகிறாய்
கனவில் வருகிறாய்
நினைவினில் கரைகிறாய்
உன் காதல் நானே என்கிறாய்...-