swamy nath217   (Swamynath✍)
7 Followers · 10 Following

Writer from lockdown... Thanks to corona 😊
Nature lover..
Joined 4 June 2020


Writer from lockdown... Thanks to corona 😊
Nature lover..
Joined 4 June 2020
16 MAY 2022 AT 13:58

Paid Content

-


27 DEC 2021 AT 21:20

உன் இதழ் எனும்
மேகத்தால்
முத்தம் எனும்..
மழை பொழிய..
கன்னம் எனும் நிலத்தில்
உமிழ் ஈரம் பாய.....
இன்பத்தில் நிறைந்ததடி
என் மனமும்...
மழை வெள்ளத்தில்
நிறைந்த அணையைப் போல..

-


1 DEC 2021 AT 20:41

வீடும் கருவறை தான்
என்பதை உணர்தேன்....
புது உலகம் காண
வெளியே வரும் குழந்தை போல்
இலக்கை நோக்கி
வெளியே பயணம் தொடங்கிய பின்....
அன்னையின் அன்பும்
ஆரோக்கிய உணவும்
பிணி என்றால் உடனே
வரும் நாட்டு மருந்தும்
அன்னையின் அனைப்பில்
ஏற்படும் கதகதப்பும்..
என்னை உணரச் செய்தது..
வீடும் கருவறை தான் என்று..
ஆம்.,...
வீடும் கருவறை தான் என்று...


-


9 OCT 2021 AT 20:20

சூரியனும் தன் உஷ்ணம்
தனித்து மாலை வேளையில்
கீழ் இறங்கி வர,
என் மீது கொண்ட
கோபம் தனித்து...
மனம் இறங்கி வர
எண்ணம் இல்லையோ
என்னவளே....

-


28 AUG 2021 AT 21:27

மாதங்களை எண்ணும் சிலர்..
வாரங்களை எண்ணும் சிலர்..
நாட்களை எண்ணும் சிலர்..
நொடிகளை எண்ணும் சிலர்..
இது காலத்தின் அருமை கருதி அல்ல..
காலம் கடந்து காணச் செல்லும்
உறவுகளை காண...
அணைக்கும் உறவுகள் சில..
அரவணைக்கும் உறவுகள் சில..
ஏக்கங்கள் பல, எதிர்பார்ப்புகள் பல..
சொல்லிச் சிரிக்க கதைகள் பல...
சொல்லாமல் மறைக்கவும்
கதைகள் பல...
விடுமுறை என்பது எங்கள்
வாழ்வின் வசந்த கால நாட்கள்..
அதை வரவேற்க என்றும்
காத்திருக்கும் மண்ணை
காக்கும் மைந்தர்கள்...

-


23 JUL 2021 AT 21:08

ஆயிரம் புடவை நான்
உனக்கு பரிசளித்து...
அதை நீ உடுத்தி வந்து
என் கண் முன்னே பேரழகாய்
தோன்றினாலும்...
முதல் முறை நான் பூ வைக்க
வந்த நொடி....
நீ பட்டு டுத்தி வந்த
அந்த தருணத்தை
ஈடு செய்ய இயலாதடி
என்னவலே...

-


29 JUN 2021 AT 21:30

தட்சணை கொடுத்து
கடவுளுக்கு சூட்டிய
மாலையை வாங்கி விட வேண்டும்...
வரும் வரதட்சிணை கொண்டு
வரும் வரதட்சிணை கொண்டு....
மேலும் ஒரு படி
செல்வந்தர்
ஆகிவிட வேண்டும்....
இப்படிக்கு நாங்கள்
கூசாமல் வரதட்சிணை
வேண்டி பெண் பார்க்கும்
வரட்டு வர்க்கத்தினர்...


-


11 JUN 2021 AT 14:59

கூச்சலுக்கு பஞ்சம் இல்லை
இவர்கள் ஒன்று சேர்கையில்...
தீண்டப்படாத தின்பண்டமும்
அன்று தீர்ந்து விடும்..
பசியாலோ ருசியாலோ அன்று
இவர்கள் ஒன்று கூடிய
குஷியால்..
குடும்ப விழாக்கள் இவர்களின்
மாநாடு கூடும் இடம்...
மாநாட்டில்
வீட்டுக் கதைகள் விவாதிக்கப்படும்..
புகைப்படங்கள் கண்டு புன்னகை
புரியும் புத்துணர்ச்சி தருணம்..
அதை கண்டு நினைவுகள் பின் செல்ல
நேரம் முன் செல்ல...
அன்றைய தினம் அருவி போல்
ஆர்ப்பரித்து தொடங்கி
ஆறு போல் அமைதியாய் முடியும்
சோகமான பிரிவுடன்..


-


6 MAR 2021 AT 21:14

இன்று
மின்னனு முறையில் அரை நிமிடத்தில்
ஆயிரம் நிழற்படம்....
என் உள்ளங்கையில்...
ஏனோ???
மீண்டும் அதை எடுத்து பார்க்க
என் மனதிற்கு ஆசை இல்லை...
ஆனால்... ஆனால்..,....
பூட்டி கிடக்கும் அலமாரியை நோக்கியே
என் மனதின் கண்கள்...
ஏனென்றால்**
என் கடந்தகால நினைவுகளை
கருப்பு வெள்ளை வடிவத்தில்
புகைப்படமாய் சேமித்து வைத்துள்ளேன்.....
மாதம் ஒருமுறை... அந்தி மாலை
தென்றல் தவழும் நேரம்.. மெல்லிசையோடு... அதை
என் கையில் வருடி காணும்போது..
நிகழ் உலகம் மறந்து நினைவுலகதில்
நீந்துகிறேன்.. கண்ணீர் கலந்த சிரிப்புடன்...
புதுமைகள் ஆயிரம் வந்தாலும்
புகைப்படம் என்ற பழமை தரும்
இன்ப த்திற்கு ஈடேதும் இல்லை!!

-


13 FEB 2021 AT 21:10

காதல் என்னும் போரில்
இதயம் என்னும்
என் கோட்டையை உன்னிடத்தில்
இழந்துவிட்டேன்...
நீ கேட்கும்
முத்தம் எனும் கப்பம்
கட்ட
காலமெல்லாம் நான் தயார்...

-


Fetching swamy nath217 Quotes