எல்லா வருத்தங்களுக்கும்
ஏதோ ஒரு வகை
ஆறுதல் பெற முடிந்த உன் மகள் ...
உன் இல்லாமையை
ஏற்றுக் கொள்ள
தோற்று விட்டது ஏனோ.....-
நீ இல்லா வருடங்கள்
அதிகரிக்க உன்னை காண
என் மன ஏக்கமும் அதிகரித்து வருகிறது...-
காண தவிக்கும்
கண்களுக்கு என்ன சொல்லி
புரிய வைப்பேன்.....
நீ கண்காணா தூரம் சென்றாய் என்று..-
தவறு செய்தவரை எல்லாம் விட்டுவிட்டு
அதில் உடன்பாடு இல்லாதவரை
தண்டிப்பதில் இறைவனும்
மனிதரும் ஒரே தராசில் நிற்கின்றனர்-
இன்று வரை
ஏனென்று தெரியவில்லை,
புரியவில்லை, ஒரு சிலரின்
வாழ்க்கை மட்டும்
ஒரு சிலர் உருவாக்கிய
கால அட்டவணைக்கு
பின்னால் ஏன் ஓடுகிறது என்று...-
ஆக மொத்தத்தில் தற்போது
எண்ணிப் பார்த்தால்
எந்த சூழ்நிலையிலும்
எனக்காகவும்
என்னைப் பற்றி யோசிக்கவும்
யாரும் இல்லை என்பதே உண்மை-
என் மூளை முடங்கிப் போயிற்று
என் உணர்வுகள் அல்ல
நீ பேசுவது அனைத்தும் என்னால் உணர முடிகிறது
என் கண்களை உற்று பார் உனக்காக பதில் நீ அறிவாய்
-
வெளியே சொன்னாலும்
ஆறுதல் இல்லை
என்று ஆன பிறகு
சில வருத்தங்களை
மனதில் பூட்டி வைப்பதில்
தவறில்லை-
ஒருவருக்கு நடக்கப் போகும்
எல்லா நல்லதையும்
தடை செய்துவிட்டு
நான் மட்டும்
எல்லா சூழ்நிலையிலும்
நல்லா இருக்கணும்
என்று நினைப்பது
எந்த விதத்தில் நியாயம்????-
யார் சொன்னது
ஆண்கள் பெரிதாக ஒன்றும்
உணர்வுகளை வெளிப்படுத்துவது
இல்லை என்று...
அருகில் இருந்து
அவர் சொல்வதை
கேளுங்கள்
உணர்வுகள் அழகாக வெளிப்படும்-