தங்களுக்கு பேரன்கள் பேத்திகள்
பிறந்த பிறகே
தாங்கள் சந்தித்த கர்ப்ப கால
அனுதாபங்களை
அவமானங்களை
அனுபவங்களை
பச்சிளம் தாய்களிடம்
பகிர்ந்து கொள்கின்றனர்
தாயார்களும்
மாமியார்களும்....
-
தங்க பஸ்பமே சாப்பிடக் கொடுத்தாலும்
தாயின் மடிக்கு ஈடாகாது
குழந்தையின் பசி-
உங்க தோழிகள் கிட்ட அவங்க வாழ்க்கைய கேட்டு பாருங்க..
உங்க கணவர் உங்கள எவ்ளோ
நல்லா வெச்சிருக்காங்க னு தெரிஞ்சிக்குவீங்க.
-
தினம் என்னும் தரையில்
அரங்கேற்றம் செய்யப்படுவதில்லை
மனம் என்னும் நாடக
மேடையில்
ஒத்திகை பார்க்கப்பட்ட
வார்த்தைகள்...-
வளர வளர தான் ரெண்டு காரியம்
நல்லா புரியுது..
1. நமக்கு ஒன்னும் அவ்ளோ வாயசாகிடல..
2. நாம இன்னும் சின்னபுள்ளதனமா
இருக்கோம்..
-
பொண்டாட்டிய அடிக்கிறதெல்லாம்
வீரமே இல்ல..
திருந்துங்கடா என நண்பர்களிடம்
அலைபேசியில் கூறிவிட்டு
குழம்பில் ருசி இல்லை என்று வீட்டினுள்
தன் மனைவியை சபித்தான்
உனக்கெல்லாம் எங்கடி
சுக பிரசவம் ஆகப்போகுது
என்று...-
Normal delivery ஏன் பரவால்ல
சொல்றாங்க??
அது ஒண்ணுமில்ல...
அம்மா வீட்ல இருந்து வந்த பிறகு
வீட்டு சேவைகள் செய்ய ஒடம்பு தெம்பாய்க்கும்
மத்தபடி தாயும் சேயும் நலமாக இருக்குறதுல யாருக்கும் அக்கறை இல்லை
இங்க பெண்கள் உயிரை விட வீட்டு சேவைகள் தான் முக்கியம்..-
பேசுவதற்கு வார்த்தைகள் இல்லையென்றாலும்
கதைப்பதற்கு காரணம் வைத்துக்கொள்ளுங்கள்
வாழ்கைப்பட்ட தினங்களை விட
வார்த்தைகளுக்கு கொடுக்கப்பட்ட
நாட்கள் குறைவாகவே இருக்கும்
வாழ்வின் முடிவில்....
வார்த்தை - வாழ்வின் சாளரம்-