Suryaa Sathriyan   (சூர்யா சிவன்)
644 Followers · 109 Following

read more
Joined 13 July 2018


read more
Joined 13 July 2018
30 JUL AT 19:08

வானத்து கூறையில் நிறமாகும்
வானவிலின் சாயங்கள் யாவும்
மேகத்துளிகள் ஒளிந்து வெட்கும்
காதல் முணுகளுக்கு நிழலாகும்
செங்கீற்றின் மோகனங்கள் களைந்து
மென்காற்றில் கார்மேவும் பொழுதினுக்கு
வர்ணங்கள் ஏழும் உந்தன்
விழியின் திரையில் ஒளியாகும்

-


7 FEB AT 20:57

வானத்து சாற்றை நினைவில் - ஊற்றி
ஏட்டில் பிழிந்த ஏழ்வர்ணமும்
மருள் மாலையின் துளி - ஓயும்
பொழுதினுக்கு தரையாடும் வானவில்லாய்
இருதய சோலையில் சிலிர்க்கும் - வெண்மயிலின்
தோகை ஒவ்வொன்றினுக்கும் காதல் சொல்லும்
குளிர் மேவும் கதிரொளிக்கு - பிறைசூடும்
உந்தன் வெண்விழியின் காதல் கடிதம்

-


14 JAN AT 10:48

ஒன்றில் நடுவே மெயொத்தி
முழுமை வாழ்வின் சித்தமும்
கரம்மேவும் திருக்கழல் பற்றிடும்
வரம்வார்க்கும் ஆருரான் அடியே
மூச்சும் ஆழ்துளியும் ஈகையிடும்
பொழுதினுக்கு இறங்கி அடியேனை
ஆற்றுப்படுத்தும் பெருந் திண்ணம்
எளியோன் நிழல்புகுவாய் சிவம்

-


3 NOV 2024 AT 8:02

உந்தன் செவ்விழி நிழலேந்தும்
இமை ஒற்றையில் எந்தன் நினைவும்!
உந்தன் கார்மணியில் நிறைந்து
ததும்பும் ஆர்ப்பரிப்பில் எந்தன் அரவணைப்பும்!
உந்தன் இருதய சுவாசங்களில்
முறையொன்றில் நுழைந்திர ஏங்கும் உயிரும்!
உந்தன் நிறைவிழியின் துளிகளில்
கசிந்திட தவமேற்று கிடக்கிறது எந்தன் காதல்!

-


3 NOV 2024 AT 7:57


விழிநிறை அன்பிற்கு மிதகாய்
துளியாகுதோ உந்தன் நினைவுகள்!
எந்தனிமை சிமிட்டிடாது தாங்கிக்கிடக்கும்
உந்தன் பிம்பங்களின் பாரங்கள்!
வாழ்வேழும் நிறைந்து வந்தும்
கானல் வழியின் காடலாகுதோ!
உந்தன் காரிருள் மைவிலக்கி
எந்தன் காதல்விழியின் ஒளியாவாயோ!

-


3 NOV 2024 AT 7:55

மொட்டு அவிழ்ந்து தேனெடுத்தும்
சாயம் ஒட்டா இதழ்களாய்
விரல் நோக மகரந்தமுறுஞ்சி
மனம் நிறையா பட்டுபூச்சியாய்!
அக்கறைக் கொண்டு நாட்படும்
களைப்பின் சளிப்பாய் குணங்கள்
ஆவது அன்பின் நோன்பில்
சாயம் போய்விடுகிறது - காதல்!

-


3 NOV 2024 AT 7:52

என்னுள் நீ

-


3 NOV 2024 AT 7:48

காதல் துளிர்

-


3 NOV 2024 AT 7:44

ஆர்ப்பரித்து அயர்ந்திருக்கும் கண்களுள்
நிறமாடும் செவ்விழி இரண்டும்
நூற்றின் ஜனனத்தில் ஒன்றாய்
நினைவுகளை ஏந்திக்கடத்தும் இருதயச்
சாளரத்தின் உயிர் சுவாசத்தில்
வந்தணையும் உதிரம் நீயாய்!
நாளும் வாழும் காதற்களியில்
சிணுங்கி மலரும் தாமரையும்! - நிலவும்!!

-


3 NOV 2024 AT 7:42

இன்பச்சொரிவும் இளநினைவும்
இளநரை இங்குமங்கும் இருந்தும்
இணைப்பில் இறுகப்பற்றி
இயக்கும் இருதயத்தின்
இளைப்பாறல் இருக்கும்
நிறைவாழ்வின் அர்த்தம் நீ!!

-


Fetching Suryaa Sathriyan Quotes