மழை துளிகள் என்னை அறைந்து சொன்னது அளவாக பெய்தால் தான் நானும் கூட அழகு என்று...
-
சோர்வறியாமல் தினந்தினம் வாழ்த்து
சொல்கிறேன் 365 நாட்களுக்கு பின்
வரும் உன் பிறந்தநாளுக்கு.....-
என்னை போல் ஒருவர் உன்னை காதலிக்க முடியாது என்பதற்காகவே உன்னை காதலிக்கிறேன்...
-
தங்கையின் அரவணைப்பை காட்டவே வந்தாயோ இந்த அண்ணனுக்கு
குறும்பு செய்து உன்னை கோபமூட்ட முயற்சிப்பேன் உன் கோபம் அறிய என் கண்கள் காத்திருக்கும் ஆனால் என் குறும்புகளால் உன் உதட்டில் சிரிப்பை மட்டும் காண்பேன்
நான் வலி தந்தாலும் என் வலி உணர்ந்திடுவாய்
காதல் தோல்வியிலும் கண்டிப்புடன் என் உயிர் காத்திடுவாய்
உன்னோடு பிறக்கவில்லை என்றாலும் என்னை உன் அண்ணன் என அங்கீகரித்தாய் இது இந்த ஜென்மத்தில் எனக்கு கிடைத்த வரமாகும்
உன் அன்புக்கு ஈடு கொடுக்க என் அன்பு போதுமானதா என வியப்பேன், வியப்பிலும் உன் முக பாவங்கள் என்னை சிரிக்கவைக்கும்.என்றும் உன்னை என் உடன்பிறந்தோள் போல்
நேசிப்பேன்
என் உடன்பிறவா தங்கைக்கு சமர்ப்பணம்...💙💙-
நட்சத்திரமா மாறும் என நம்பி விண்ணை நோக்கி எறிந்த கல் தான் என் காதல்💔
-
எனக்கு இன்னொரு பிறவி மீது
நம்பிக்கை இல்லை, ஆனால் வேண்டுகிறேன்..!
அவளுக்கு பிடித்தவனாக நான் பிறக்க வேண்டும் என்று...!-
சந்திரனாக இருக்க கூட ஆசை தான் அவள் வீட்டு ஜன்னல் வழியே இந்நேரம் அவளை ரசிக்க..
-
ஊரெல்லாம் உறங்கிக் கிடக்கிறது,
தூங்காமல் என் மனம் தூங்க விடாமல்
உன் முகம்-