காதல் மழை பொழிகையில்
நனைகிறேன் உன் நினைவுகளால்
உன் அன்பின் அரவணைப்பில்
கரைந்து போகிறேன் உன்னோடு
உன் இதய துடிப்பில்
எனது காதல் எதிரொலிக்கிறது
உன் சுவாசத்தில் கலந்து
உன் அழகில் மயங்கி
என்றும் உன்னையே சுற்றி வருகிறேன்
_சூரிய தேவன்
-
நீ கடல் நான் அலை
உன் அலைகளில் நான் ஆடிப்பாடுகிறேன்
உன் ஆழத்தில் மூழ்கி
என்றும் உன்னோடு கலந்திருக்கிறேன்
_சூரிய தேவன்-
நீ பூ நான் வண்டு
உன் தேன் எடுப்பதற்காக நான் ஏங்குகிறேன்
உன் அழகை ரசித்து
என்றும் உன்னையே சுற்றி வருகிறேன்
_சூரிய தேவன்-
என் இதயத் துடிப்பே நீ,
என் சுவாசக் காற்றே நீ,
என் காதல் கவிதையே நீ,
என் வாழ்வின் அர்த்தமே நீ,
ஒவ்வொரு நொடியும் உன்னோடு,
கழிய வேண்டும் என்றே,
ஏங்குகிறது
_சூரிய தேவன்-
என் கண் எதிரே ஆயிரம் கண்ணாடிகள் இருந்தாலும்
என்ன பிரகாசமாக காட்டும் கண்ணாடி உன் கண்கள் தான்
_சூரிய தேவன்-
பூக்கள் எல்லாம் உன்னை காண மறுப்பு தெரிவிக்கின்றது.
உன்னை காண முடியாமல் அல்ல
உன் அழகை கண்டு பொறாமை கொள்வதால் தான்..🥰
_சூரிய தேவன்-
பழையன கழிதலும் புதியன புகுதலும்
போகி தீயில் எரிந்து சாம்பலாகும்
மனதில் இருந்த துக்கம் துடைத்தெறிந்து
புதிய ஆண்டுக்கு வாழ்த்து சொல்லுவோம்
_ சூரிய தேவன்-
பழையன போகட்டும், புதியன வாழ்க
போகி தீயில் எரியட்டும் சாம்பல் ஆக
மனதில் இருந்த சோகம் துடைத்தெறிந்து
புது வருடத்தை உற்சாகமாக வரவேற்போம்
_சூரிய் தேவன்-
பொன்னாடு வெல்கவே பொங்கலோ பொங்கல்!
புதியதிரா விடம் வாழ்க பொங்கலோ பொங்கல்!
தை மாதம் வந்தது
தானியம் பெருகியது.
பொங்கல் பானை பொங்கி எழுகின்றது
அதைப் பார்த்து நம் மனதில்
இன்பம் பொங்கி வழிகின்றது.
_சூரியதேவன்-
உன் கண்கள் இரண்டு நட்சத்திரம்,
இரவில் வானில் ஒளிரும்.
உன் சிரிப்பு ஒரு பூங்கா,
வண்ணத்துப்பூக்கள் மலரும்.
உன் குரல் ஒரு இளவேனி காற்று,
மனதை இதமாக வீசும்.
உன் தொடுதல் ஒரு மந்திரம்,
என்னை மயக்கி விடும்.
உன் காதல் என் வாழ்வின் வெளிச்சம்,
என்னை என்றும் உயிர்ப்பிக்கும்.
_ சூரிய தேவன்-