உனக்கான அந்த
காதலும் நேசமும்
இன்னும்
தீண்டப்படாமல்
நினைவுகளின்
உள்ளே…-
⚡யுவனின் குரல்
⚡என் வாழ்வின் ஒவ்வோரு படியிலும் நண்பர்களின் த... read more
என்
இதயத்தை
கைகளிலேந்தி
மீட்டுகிறாய்..
தாளத்திற்கேற்ப…
அதிர்ந்து துடிக்கிறது
மனம்-
தனிமை
விடுதலை என்றிருந்தேன்
காலங்கள் சில…
சிறையென்று
மாற்றி விட்டாய் நீ வந்து
நாட்கள் சில…-
வானொலிக்காக மட்டும் ஒருவன்
நகர வாழ்வை விரும்ப முடியுமா….
வாழ்வில் பிரியத்திற்குரிய
ஒரு சகியைப் போல
வானொலியின் மீது காதல்
நகரை விட்டு வேலை நிமித்தம்
தொலதூர ஊர்களுக்கு செல்லும் பொழுது
காதல் மனைவியை விட்டு நீங்கிய
பிரிவின் துயர்
மீண்டும் சந்திப்பை எதிர்நோக்கிய ஏக்கம்….
இன்று வரை அனுபவித்துக் கொண்டிருக்கும்
நான்….-
வெட்கி சிவக்கும் இந்த அந்தி வானம்
நிலவுக்கும் எனக்கும் தூது சொல்லும் …-
நீ அருகிருக்கும் நாட்களில்
குளிர்கால இரவில்
வீட்டின் தாழ்வாரத்தில்
சுகமாக உறங்கும் நாயைப் போல
என் மனதின் தாழ்வாரத்தில்
உறங்கும் உன் நினைவுகள்...
நீ அருகில்லா நாட்களில்
ஏனென்றறியா ஓசை எழுப்பி
வெளியெங்கும் அலையும்
என் உறக்கம் கெடுத்து...-
புத்தகப் பையில்
கனவுகளையும்
...சுமந்து செல்கிறாய்
புதிய கனவுகள்
...புதிய உறவுகளுக்காக-
தனிமையின் வெட்கை
இரவெங்கும் சூழ்ந்திருக்க...
தூக்கம் தொலைத்து
அளந்திருந்தேன் பஞ்சணையை
காதலெனும்
உன் குளிர் கரங்கள்
அணைக்க..
உறங்கிப்போனேன்
கால நேரமற்ற உந்தன்
பெரு வெளியில்...-