ஒரு சின்ன பார்வையில்
ஆயிரம் ரசனைகளை என் மீது பொழிகிறாய்..
அதில் முழுவதுமாய் நனைந்துவிட்டேன்,
உன் அன்பு என்னை உலர்த்துவதற்குள்.....-
sugan dhanasekaran
(சுகன் தனசேகரன்..)
202 Followers · 759 Following
எல்லா மன நிலையிலும் எழுத ஆசை...
Joined 28 November 2020
29 SEP AT 0:18
28 SEP AT 22:59
உனக்காக பழகுகிறேன்.
அழகாய் ருசிப்பதற்கும்,
அழகை ரசிப்பதற்கும்....-
28 SEP AT 22:56
நாம் நேரம் செலவிட,
நமக்காக காத்திருக்கிறது
இந்த
மழையும் தேநீரும்...-
28 SEP AT 22:17
பிழைகள் இருந்தாலும்,
என் அர்த்தங்களை சரியாய்
புரிந்துகொள்பவள்
அவள் மட்டுமே....-
31 AUG AT 23:11
அடைபட்டு இருப்பதை
உணர்ந்தால்தான்,
வாய்ப்புகளின் வழியே
சிறகை விரித்து பறக்க முடியும்...-
11 AUG AT 21:14
அவளை பத்திரமாக
கூட்டி செல்ல வேண்டும் என பதட்டப்படும் கணவனும்,
அவர் பார்த்துக்கொள்வார்
என பதட்டத்தை வெளியே காட்டிக்கொள்ளாத
மனைவியும்,
இன்றும் இருக்கத்தான்
செய்கிறார்கள் நம்மை சுற்றி.....-
21 JUL AT 21:04
நானும் ஒரு
நீர்க்குமிழிதான்
உங்களிடம்,
மிக எளிதாய்
உடைந்துவிடுவதில்....-