தினம் தினம்
என் கனவுகளை அலங்கரித்துக்
கொண்டிருக்கிறது... உன்
வளையல்களின் கீச்சொலியும்.,
கொலுசின் கொஞ்சல்களும்....-
மின் காந்த ரயிலின்,
வேகம்கூட, தூபம்போடும் உன்னிடம்,
கண் அசைவில் என்னை,
வசப்படுத்திக் கொள்ளும்...
வேகத்தின், சூட்சமத்தை அறிந்திட...-
உன் குரலின்.,
மௌனகீதத்தை கேட்கவே...
இரவின் மடியில் தலைசாய்த்து,
கனவுக் கதவுகளை
தாளிடாமல் காத்திருக்கிறேன்...
மீண்டும் வாராயோ...
என் கண்மணி....-
உனை கண்ட நொடி..,
நாணத்தால் நவில்ந்து...
காகிதத்தில் கொட்டித் தீர்த்துவிட்டது...
உனக்கான கவிமழையை..
என் எழுதுகோல்...-
என் மனதை வியாபித்த,
உனை வர்ணித்து
கவிதை ஒன்றை, புனைந்திட
தமிழில் வார்த்தைகளை வலைவீசி தேடாமல்,..
தூண்டிலிட்டு தேடுகிறேன்..
உன் இதழின் வசீகரத்தில், அகப்பட்ட
என்னைப்போல், ஓர் சொல்கூட,
அகப்படவில்லை உனக்காய் என்னிடம்...
அழகியலில் அத்தனையும் உன்னிடம்,
தஞ்சம்பெற்றிருக்க.. தமிழ் சொல்லுக்கு மட்டும் விதிவிலக்கு இருக்குமா என்ன...
இலக்கணத்துடன் கவிதைகூற...
உன் புன்னகை ஒன்றுபோதுமே...-
தினம் தினம்
என் கனவுகளை அலங்கரித்துக்
கொண்டிருக்கிறது... உன்
கைவளையல்களின் கீச்சொலியும்.,
உன் கால் கொலுசின் கொஞ்சல்களும்....-
எத்தனை முறை முயற்சித்து.,
உனை போற்றி எழுதினாலும்,
போதவில்லை என் மனதுக்கு...
அடித்துக் கிறுக்கி
பலமுறை எழுதினாலும்,
கோபமில்லை என்மேல்
காகிதத்துக்கும், காதலுக்கும்...
மீண்டும் மீண்டும் என்னை,
எழுத்த் தூண்டுகிறது... உனக்கான
முதல் காதல் கவிதையை...-
உன் மூச்சுக்காற்றை,
உள்ளிழுத்து, உண்டு, செரித்து...
உன்னிடம் தரும்வரை.. என்
மூச்சுக்காற்றும் மூர்ச்சையாகாது...-
கள்வனின் காதலை..,
கன்னிஇள மாதுவிடம்...
சொல்லும் முன்னமே...
கண்ணிரண்டில் சமிக்கை செய்ய..,
புரியாமல் பேதலித்தவனை...
இழுத்து வளைத்து முத்தமிட...
காதலில், காமமும் குலைந்து..
முக்தி கொண்டான் உத்தமன்..-
அழகிய வனப்புடன்,
அசைந்தாடும் அமுதத்தேரை,
அரை கணம், அளந்து,
வியந்திட முயன்றேன்..
காற்றும் கூந்தலால்,
ஓலை கீற்றொன்று வெய்திட...
கீற்றின் நடுவே,
தஞ்சம் கொண்டதெனது நெஞ்சம்-