அவள் வாஞ்சைகளை அறிந்த எழுதுகோள்-
எழுத்தாளனோடு திக்குவிசயம் செய்துக்கொண்டிருக்கிறது.
~சுபி-
கல்லு குத்தாம அப்பன் வளர்த்தான்
காத்து படாம தாயி வளர்த்தா
ரத்தினக்கட்டினு நினச்சு
தலையில தூக்கி வளர்த்தானுவ.
பாழாப்போன மனசுல-
அப்பனும் நிக்கல,
ஆத்தாளும் நிக்கல.
வேற ஒருத்தன் குடிபோக
கல்லும் குத்துசாம்
காத்தும் அடிசுச்சாம்
ரத்தினக்கட்டி,
ஒடஞ்ச மண்சட்டி ஆனுச்சாம்.
~ சுபி
-
Sweet Pain
That's the thing about love, dear.
Even when you seem to unleash all of it,
It can still haunt you around.-
காதல் தராத இன்பம் இல்லை
காதல் தராத துன்பம் இல்லை
காதல் தராத வலி இல்லை
காதல் தராத ஆறுதல் இல்லை
நீயில்லாமல் காதலில் நயமே இல்லையே!-
நிலவு சூழும் நேரத்தில்
நின் நினைவின் ஓட்டத்தையும்,
காதல் காட்சியையும்
கட்டி ஆரத்தழுவி -
கண்களில் நீர் மல்க,
காத்திருந்த தலைவனின்
காதல் பரீட்சையில்,
உவமையாக வாழும்
காதல் மேதை நீ்!-
Hello, everyone!
It's been a long time since I’ve created something. Moreover, the last masterpiece I created was my baby girl, my Kannamma, Adhiti. Life’s great with all the blessings I've received. And in the eyes of my baby girl, I can see the light of the day and the mystery of the night. Having played the role of the mother, I've lost a little bit of everything that I've had in a creator's life. Bringing everything into an art form makes me sceptical. Thank you all for sending messages enquiring about my wellness. I’m great, just got carried away with motherhood duties. Let's catch up now and then.
-
பார்வையில் அன்பாய் அனைத்திடுவாள்.
நெஞ்சத்திலே நேசம் நிறைத்திடுவாள்.
சண்டைகள் போட்டாளும்
ஆர்வமாய் கொஞ்சிடுவாள்.
தீராத சேட்டைகள் செய்திடுவாள்.
துன்பம் எனை தீண்டும் போது,
துன்பத்தையே துரத்திடுவாள்.
நங்கூரம் போட்ட கப்பல் போல,
மனதில் அன்பை நிறுத்திடுவாள்.
ஒரு கயிற்றில் நட்பையும்
இன்னொரு கயிற்றில் சண்டையும்
பக்குவமாய் கோர்த்திடுவாள்.
ஜென்மம் முழுக்க இவளே
சொந்தம் என்று நினைக்க வைத்திடுவாள்.
அவளின் நேசம் முன்னாள்
மலையும் சிறிது என்று தோன்ற வைத்திடுவாள்.-
நித்தம் வீசும் தென்றலுக்கு
முத்தம் தர நெஞ்சமில்லையோ?
காதில் பாடும் ராகத்துக்கு
தேகம் தீண்ட ஆசையில்லையோ?
சாகாவரம் கேட்டாலும்
காதல் கொள்ள நீ வேண்டும்.
ஏழு சென்மம் போதாதையா,
நாம் கொண்ட காதலைக் கைது செய்ய
ஓர் உலகம் கேட்போம்
தூவானம் கேட்போம்.
-
We were
Partly wrong,
Partly hurt,
Partly damaged,
Partly burned,
Partly disturbed,
Partly distressed.
I could murder you
Thousand times and more.
But I'd rather
Name you disappointment.-
நதி- கரையை
பார்த்த போதெல்லாம்
கட்டி அணைத்தும்
முத்தமிட்டும் சென்றது.
பெண்ணே! நீ மட்டும்
ஏன் இவ்வளவு தூரம் இருக்கிறாய்?
@subhitcha_varadharajan.poetry-