விட்டு விலக மனமில்லை
என்றாலும் விட்டு விடுங்கள்....,
சில நேரங்களில் விலகலும்
புரிதலை தரலாம்....!!-
அடுத்த நிலையை அடைய முயற்சி செய்..!
அடுத்தவன் நிலையை அடைய முயற்சி செய்யாதே..!-
இன்று எதையும் விட்டுத் தர மனமில்லாதவர்கள் நேற்று நிறைய இழந்திருக்கலாம்..!
-
அடுத்தவர்களின் வலிகளை கேலி செய்வது உங்களுக்கு சாதாரணமாக தோன்றலாம் காயம்பட்டவனுக்கே தெரியும் காயத்தின் ஆழமும் வலியும்.
-
எதை வேண்டுமானாலும் விலை கொடுத்து வாங்கிவிடலாம் ஒருவரின் பாசத்தையும் நேசத்தையும் காசுக்கு வாங்கமுடியாது...!!!
-
தனிமையோடு சமரசமாகி விடுங்கள் கைவிடப்படுகையில் தனித்துவிட்டோமே என ஒருபோதும் மனம் குலைய வேண்டியதில்லை..!!!
-
மனிதனுக்கு மானம் மட்டும் இல்லையெனில் இந்த உலகில் பணத்திற்க்கு மதிப்பே இல்லாமல் போயிருக்கும்....!!!
-
நாம் நினைப்பது போல் நம் நிழல் கூட நடக்கவில்லை என்றான பிறகு மற்றவர்களிடம் எதற்கு இந்த எதிர்ப்பார்ப்பு..!!!
-
நம் மீதான நம்பிக்கை என்பது நம்மைபற்றி நாமே சொல்லி புரியவைத்த பின் வருவதல்ல, என்னை நம்பு என்பது கூட ஒரு வகை அசிங்கமே..!!!
-
வாழ்கை எனும் பலூனில் அன்பு எனும் காற்றை அளவாய் ஊதினால் அழகாகவும் அதிகமாய் ஊதினால் ஆபத்திலும் முடியும்...!!!
-