எளிமை மிகுந்த
வாழ்வில் மனநிறைவுகள்
மிகுந்து ததும்பும்-
பூமியைப்போல
பொறுமை யாருக்கும்
கிடையாது எப்பிறப்பை
தாங்கிபிடிக்கிறதோ
அப்பிறப்பின் இறப்பையும்
வாங்கிக்கொள்கிறது
அதே மடியினில்-
போல என்ற வார்த்தைக்குள்
அடங்கிடாமல் தனித்திருந்தே
அழகை நிலை நிறுத்தலாம்.-
யாருடைய தேவதைகளும்
பற்றில்லாத இடத்தில்
ஒருபோதும் நுழைய
மெனக்கெடுவதில்லை-
ரசனைகள் ஒன்றிப்போனவர்கள்
ரசிகர்களாகவே இருந்துவிட்டால்
அன்றாடம் நேசங்களும்
மலர்ந்து கொண்டிருக்கும் — % &-
எனக்கு பிடித்தவர்களுக்கு
என்னை பிடிப்பதில்லை
பதிலுக்கு கூடுதல்
அழகைத்தான் அவர்கள்
எதிர்பார்க்கிறார்கள்
என்னை என்பது மட்டுமல்ல — % &-
எனக்கு பிடித்தவர்களுக்கு
என்னை பிடிப்பதில்லை
பதிலுக்கு கூடுதல்
அழகைத்தான் அவர்கள்
எதிர்பார்க்கிறார்கள்
என்னை என்பது மட்டுமல்ல — % &-
வாழ்கிறப்போதே
வாழ்த்தி அன்பு செலுத்த
மனமில்லாதவர்கள் எதற்கும்
அருகதையற்றவர்களே— % &-
பயணங்கள் பல
கடந்தாலும்
நாம் விரும்பி
பயணித்த நாட்களே
நம்மில்
பதிந்துவிடுகிறது — % &-