எனக்கென்று ஒரு நிலவு உள்ளது
நான் எங்கு சென்றாலும்
என் பின்னே வரும்
காதலா….???
என்று கேட்டால்
இல்லை….!!!
அது எனக்கு
அமாவாசை நிலவு
இருளில் தான் இருக்கும்…
—நிலா-
இங்கே எதுவும் சரி இல்லை….!!
ஏன் நானே சரி இல்லை…!!!
விடியவே இல்லை…!!!!
இருந்தும்
நாளை அழுவதற்காக…!!!!
இன்று …!!!!
இந்த வரிகளை சேகரித்து கொண்டு இருக்கிறேன்!!!…
— இன்று நேற்று நாளை-
வேண்டாம் என்று வெட்டப்படும்
நகமும்
மயிரும்
மீண்டும் துளிர்த்து வருகின்றது
சில உறவுகள் அப்படியில்லை
போனது போனதுதான்……!!-
என்
மீசைக்கும்
தாடிக்கும்
மலை பொலிந்தது
நீண்ட நாள் பிறகு
உன் புகைப்படம் காணும் போது
— நீ நினைவுகளாக💕-
இன்று ஒரு நாள் மட்டும் எனக்கு விடுமுறை கொடு
நான் நனாக இருக்கின்றேன்
தினமும் உன்னை முத்தமிட்டு கொண்டே இருக்கின்றேன்
எனக்கு ஒரு நாள் விடுமுறை கொடு
நான் என்னவளை நோக்கி செல்கின்றேன்
மீதமுள்ள முத்தங்களை அவளிடம் குடுப்பதற்கு...
இப்படிக்கு
. --டீ ❤️-
மறுக்கப்படுவேன் என்று தெரியும்
மறக்கப்படுவேன் என்று தெரிந்து இருந்தால்
மறுத்து இருப்பேன்
அவள் முதல் சந்திப்பை. ...!!!!-
மென்மையானவள் கொஞ்சம் கோபக்காரி…!!!!
அழகிய ரோஜாக்கு
மேனி எங்கும் முட்கள் எதற்கு….!!!!!-
நான் வாழ்வில் சந்திப்பவர்கள் எல்லாம்
ஜன்னல் ஓர இருக்கை போல
நிறைய கதை பேசி கொண்டு வருவார்கள்
கடைசி வரை பயணிக்க வேண்டும்
என்ற ஆசை இருக்கும்
இருந்தும் பாதியிலே சென்று விடுவேன்…..!!!!!!-
எனக்காக வந்த உறவு எல்லாம்
நிரந்தரம் தான்
அவர்கள்
எனக்கானவர்கள் இல்லை என்பதில் மட்டும்….!!!!-
ஒரு புத்தகம் நிறைய கவிதைகளை புரட்டி படித்தேன்
இறுதியில்
இப்படிக்கு
என்று உன் பெயர் இட்ட
மூன்று எழுத்து கவிதை
என் வாழ்க்கையே புரட்டி விட்டது…!!
——இப்படிக்கு-