We are new.
We neither have a problem nor any respect for the caste identities or pride that you carry.
-The Rustic Sophisticate-
In between the pain of not having things and the fear of losing things helpless lives become numb.
- The Rustic Sophisticate-
கருமம் ஒன்றோ ஓரு ஆயிரமோ
ஆழம் அனுபவம் தொடாமல் போனால்
அர்த்தம் இல்லை
வாழ்வில் முழுமை இல்லை.
உலகம் இனிதாய் வாழட்டும்.
துடிக்கும் உயிரை நீ தொட்டுப் பார்த்துக்கொள்.
அது நன்மை தீமை அறியாது.
பார்த்து காத்துக்கொள்.
-
மண் கொண்ட பொன் முகிலோ
உதடுகள் செம்பதுமப் பூவிதழோ
விண்மீன்கள் ஒளி வாங்கி
அவள் கண்மீன்கள் விழித்தவளோ
நல் இளவேனில் பூங்காற்றில்
தன் முதல் சுவாசம் நுகர்ந்தவளோ.
-
மனிதனின் சாதிய மேன்மையும் பிற பொய்களும்.
உளவியல் காடுகளில் உற்றுப் பார்த்தால்
அடையாளங்களாய்ச் சொந்தம் ஆகாத மரங்கள்.-
விடை தேடி விழைந்திருந்த
இரு வால் கொண்ட விண்மீன்கள்
நின் நுதல் பொட்டில் சரண் சேர்ந்ததோ
இரு விழி கூட்டில் குடி கொண்டதோ.-
"You suck my blood,
O good light !
But leave me back
In my womb that was dark",
The subdued solitude slowly murmered.
-
Fool is he who escapes to lies,
Fearing the expectations
Of one sidedly influenced worlds.
Breathe the truth of your life.
Your evil, ignorance or shame.
The pain, poverty or oppression.
Be brave and breathe
Beyond the red and rage
The cries and tears.
Be brave and breathe.
It is in truth
The soul lights up.
-
கடலின் கனமெல்லாம் காற்றின் உணர்வெல்லாம்
இரவின் நிலவெல்லாம் விண்ணின் வெளியெல்லாம்
பூவின் நிறமெல்லாம் புல்லின் உடலெல்லாம்
உயிர் அன்பாய் வசீகரிக்கும் உண்மை அது என்ன
அப்பேரன்பின் உச்சத்தில் தான்
பெரும் உற்சாகத்தில் தான்
உலகம் சுழல்கின்றதோ
அதுபோல் திளைத்திடத் தான்
உயிர்கள் பிறக்கின்றதோ.
-