srikumar balakrishnan  
2 Followers · 1 Following

Joined 13 April 2023


Joined 13 April 2023
18 JAN AT 19:38

கூடுகள் உள்ள மரங்கள்
பறவைகளால்
ஆசீர்வதிக்கப்பட்டவை

-


17 JAN AT 21:52

வாழ்வின் மாய வலைக்குள்
சிக்கி நடை போடுகிறோம்
ஓவ்வொரு நாளும்

-


17 JAN AT 6:50

Good Morning

-


15 JAN AT 20:15

நகர்ந்து செல்லும் நத்தை
தன் ஈர மொழியில்
எழுதிச் செல்கிறதா கவிதை?

-


14 JAN AT 22:29

பிரபஞ்ச வெளியெங்கும்
பரவிச் செல்கிறது
சூரியப் பூவின் ஒளி மகரந்தம்

-


14 JAN AT 14:25

என் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள் 🔆

-


14 JAN AT 12:30

எல்லாப் புல்லாங்குழலுக்குள்ளும்
புதைந்துக்கிடக்கிறது
கானகத்தின் பெரும் மூச்சு.

-


13 JAN AT 21:46

கூட்டில் பசியுடன் குஞ்சுப் பறவைகள்
பாவம் தாய்க்குத் தெரியாது
ஸ்விகீ ஜோமட்டோ எண்கள்

-


13 JAN AT 7:14

மழை விட்டப்பின்
பாரமாகிறது
கையிலிருக்கும் குடை

-


11 JAN AT 23:45

கடலில் மிதக்கும்
நிலவை
கரை சேர்ப்பது யார்?.

-


Fetching srikumar balakrishnan Quotes