27.06.2020
-
✍️ Sridhar karaj ✍️
Sridhar..B.sc,( Physics )
அழகு சொரி பேரமுதே
ஆறிரு தோள் சிறுவ
இந்திர நிகர் மறமே
ஈகைப் பெரு மனமே
உன்னத மன்மதனே
ஊமைக் கருள் சுதனே
எத்திசை மணக்கும் புகழே
ஏகாந்தம் பொழியும் முகமே
ஐங்கர நல் தமையே
ஒன்றான தன்னொளிப் பரமே
ஓம்கார வடிவழகே
ஔவையை ஆட்டுவித்த தமிழே...
கந்தா முருகா கருணாகரனே...!!-
நிலவிழந்த
ஒளிப்புள்ளியின்
மையத்தில்,
ஆர அளவினங்கள்
தவிர்த்துச் சுழன்ற
வட்டத்துள்,
ஆழ்ந்து அமிழ்ந்து
மீளப்பெருத்துச்
சிதறிய தூவல்களைப்
பொறுக்கியேக் கழிகிற
இரவுகளில்
விரிந்த அல்லிமலர்க்
காம்புகளில்
உறைந்த
பனித்துளியின்
நளினம்
நீ..!!-