20 MAY 2017 AT 12:28

உந்தன் கொலுசொலியின்
மறுபிறப்பு தான்
இதயத்தின் துடிப்பு
உந்தன் விழியசைவின்
மறுபிறப்பு தான்
பூமியின் சுழற்சி
உந்தன் வளைபுருவத்தின்
மறுபிறப்பு தான்
வண்ண வானவில்
உந்தன் இதழ் வார்த்தையின்
மறுபிறப்பு தான்
குயிலின் கானம்
உந்தன் மென் மூச்சுக்காற்றின்
மறுபிறப்பு தான் தவழும் தென்றல்
உந்தன் கோபத்தின்
மறுபிறப்பு தான் எரிமலைச் சீற்றம்
உந்தன் கண்ணிமை இறங்கும் நீர்த்துளியின்
மறுபிறப்பு தான்
முகில் விழும் மழைச்சாரல்
முடிவாய் இப்புவியின்
அனைத்து சாரமும்
உன் அழகைச் சார்ந்த
மறுபிறப்பு தான்......

- ஸ்ரீ