அவள் உறங்கும் தேவதை.....
ஒரு பின்னிரவு நேரத்தில்
உன்னுடன் நெடு நேரம் உரையாடியதால்
உயிரற்று போன அலைபேசியின்
கடைசி அலறலில் உணர்கிறேன்
உனக்கும் எனக்குமான தூரத்தை.....
விடியலை எதிர்நோக்கி
விம்மியே கரைகிறது நெஞ்சம்...
நிமிடங்கள் யாவும்
நுண்நொடிகளாய்
நீண்டு நகர
அவற்றை நின் நினைவுகளாக்கி
ஆசுவாசப்படுத்துகிறேன்......
களவாடிச் செல்ல
நான் உன்னை பிரிந்த
துக்கம் கொட்டிக்கிடக்க
நீயோ தொலைந்த என் தூக்கத்தை
தேடி திருடிச் செல்கிறாய்...
தொலைவு செல்கையானால்
உன்னுடன் என்னையும் அழைத்துப் போ
அல்லது நினது தூக்கமும்
எனக்கு சேர்த்து அளித்து போ....
நீ திரும்பும் வரை கனவில் உன்னுடன் கதைக்கிறேன்...
- ஸ்ரீ
17 JUN 2017 AT 21:13