காதலில் கசிந்துருகும் மேகங்கள்..
காதல் இசை மீட்டும் மரங்கள்..
திகட்டாத மாலை வேளையில்
தேனீர் கோப்பையுடன் நீ..
உன் சிறுபுன்னகையில்
தொலைத்து விட்ட என்னை மீட்டெடுத்த உன் பார்வை..
தூயிலினை தொலைத்து கனவுகளின் வழியே மீண்டும் மீண்டும் காண ஆசை நம் முதல் சந்திப்பை..-
sowmiya
(Sowmiya)
55 Followers · 27 Following
என் கவி யாவும் நீயாகி நின்றாய்...
Joined 6 March 2018
6 JUN 2021 AT 10:40
20 JUN 2021 AT 20:43
பல பாடங்கள் ஆகியது...
சில பந்தங்களாகியது..
ஒன்றே ஒன்று
என் பிரபஞ்சம் ஆகியது
என்னவன்..
-
19 JUN 2021 AT 22:08
என் கற்பனை காதல் கவி எல்லாம்
உயிர் பெறும் தருணம் நான்
எழுதும் முதல் கவி அவனுக்காக அவனுக்காகவே...-
19 JUN 2021 AT 21:15
உனக்கு நன்றிகள் பல சொன்னாலும் ஈடாகாது...
என் வாழ்வின் மிக முக்கியமான தருணத்தை உருவாக்கியது நீ தான்..
அன்று கொட்டும் மழையில் எதிர் பாராத முதல் சந்திப்பு என்னவன்...-
18 JUN 2021 AT 22:19
இதயம் பேசும் காதல்
எல்லாம் உன்னை பற்றித்தான்
ஆச்சரியம் தான் அது உன் குரலிலேயே கேட்கிறது..-
18 JUN 2021 AT 21:59
சிந்தையில் உன் முகம்
குறும் புன்னகை குடி கொண்டு
அந்த இடம் உன் நினைவால்
நிரம்பி இருக்கும்-