பழையவைகளை "கழி"த்து
புதியனவைகளை "களி"க்க
தை திருநாளிற்கு வழிதந்து
மகிழ்வுடன் நகர்கின்றது
மார்கழி மாதம்.....-
Read Love Story Episodes Use This Hashtag
... read more
யார் ஒருவர் நீ
பேசி புரிந்து
கொள்வதை விட
பேசாத உன்
மௌனத்தை புரிந்து
கொள்கிறார்களோ
அவர்களே
உனக்கானவர்கள்....-
ஆயிரம் சண்டைகள் இட்டாலும்
அலுத்து போகாத வீடு..
சின்ன இடமாய் இருந்தாலும்
சிரித்து மகிழ்ந்து சிறகடித்த வீடு..
குறுநடை போட்டதிலிருந்து
குதித்து கும்மாளம் போட்ட வீடு..
எண்ணிய போதெல்லாம் எண்ணம் மாறாமல்
எண்ணியவற்றை செய்த வீடு..
பேச்சுக்கள் தீர்ந்தாலும் நாள் முழுக்க எதையாவது
பேசி தீர்க்க வேண்டும் என்றெண்ணும் வீடு..
கட்டுப்பாடுகள் இருந்தாலும்
கவலையில்லாமல் இருந்த வீடு..
என்ன செய்தாலும்
நாம் நாமாக இருந்த வீடு..
.
.
.
.
.
....அம்மா வீடு....-
வயலட் கலர் பேனாவில்
தொடங்கிய நம் நட்பு
வருடங்கள் கடந்தும்
தொடர்கிறது..
பேச்சுக்கள் தொடராவிட்டாலும்
வயதை கடந்தும் தொடர வேண்டும்
நம் நட்பு என்றென்றுமாய்....-
வயதிற்க்கும் அனுபவத்திற்க்கும்
துளியும் சம்பந்தமில்லை என்பதே
நிதர்சனமான உண்மை.....-
அவளிடம் எதையும் மறைத்து பழக்கமில்லை
என்ற போதிலும் பழகிக் கொள்கிறான்.,
அவளின் பிறந்தநாள் பரிசினை
தருவதற்காக.....-
ஒரு பெண்ணின் அதீத ஆசையே
அவளது ஆணிடமிருந்து
கிடைத்திடும் அளவில்லா
அன்பும் அரவணைப்புமே.....-
ஒருவர் மீதான அன்பு
எந்நிலையிலும் மற்றவரை
உதாசீனப்படுத்தவோ
காயப்படுத்தவோ கூடாது......-