...மீட்டாத வீணை...
சொல்ல தெரியாமல் தவிக்கும்;
சொல்லாத சொல்லும் இனிக்கும்!
மனதும் மிகுதியாக துடிக்கும்;
மறந்தும் மறவாது நிலைக்கும்!
இந்நிலை தொடர்ந்தால்,
இனிய நாளை மலருமோ?
இன்னலாக தடம் மாறுமோ?
இன்றும் தீராத புதிர் போலவே!
என்னவென்று கூறுவது?
ஏனென்றால் தெரியாது.
விடை தேடியே பயணம்,
வினா ஓர் ரகசியமாய்...-
sou _ra
(சௌரா🌞)
108 Followers · 34 Following
Never give up👍
Epitome of Passion to write out mind,soul and heart❤
Persuing Ph.D. Physics ... read more
Epitome of Passion to write out mind,soul and heart❤
Persuing Ph.D. Physics ... read more
Joined 1 February 2020
18 JUL AT 11:55
12 SEP 2022 AT 21:58
சில மகிழ்ச்சியான
தருணங்கள்...!
பல நெகிழ்ச்சியான
நினைவுகள்...!
மன வேதனையை
சிதறடிக்குமோ?-
28 DEC 2021 AT 9:25
வார்த்தைகள் சேராத
இடங்களில்,
வருத்தங்கள் தொட
இயலுமோ?
வாடாதே அழ்மனமே
இவ்விடமே!
வலையில் சிக்காத மீனாய்
இருந்திடுவாய்!-
11 JUN 2021 AT 16:13
...வான் அழுகை...
வானமே! நீ அழுவதை வேண்டி
உனக்காக பூமியில் அழுகிறது
பயிர்களும், வயிறுகளும்!-
11 JUN 2021 AT 16:03
நேர்மையானவன் என
நினைத்து,
நேரத்தை விரும்பினேன்;
கடைபிடித்தேன்!
நேரில் உன்னை பார்க்க
துடித்த மனதை,
நேரம் மெதுவாக நகர்ந்து
ஏமாற்றியதே!
நேரத்தை துரத்துகிறேன்;
ஓட மறுக்கிறான்!-