சகித்து கொள்ள பழகிகொண்டேன்
உன்னை எதிர்த்து பேசமுடியாமல் இல்லை;
உன்னை எதிர்த்து பேசி என்னை தாழ்த்தி கொள்ள விரும்பாமல் தான்!-
மறுவார்த்தை வராமல் நான் அவன் செயலில் திகைத்து நிற்க;
கண்கள் மட்டும் அபிநயம் பிடித்து பதில் சொல்லியது அவனின் ஆயிரம் கேள்விகளுக்கு!
-
விரக்தியாய் சென்ற என் வாழ்வில் ஒளியாய் வந்தவனே!
உன்னோடு இருந்த சில காலம் கண்கள் சந்தோஷத்தில் கண்ணீர் சிந்த;
நீ இல்லா பல நாட்கள் தனிமையில் கரைந்து போக;
வாழ்க்கையே சூனியமாய் மாறி விரட்டி அடிக்க, நான் சாவை நோக்கி ஓட்டம் பிடிக்க அதுவும் என்னை விட்டு தொலை தூரம் நின்றது!
உன்னை நேசித்த மனம் இன்னொருவர் வசம் போகாமல் இருந்தும் இன்னார் மனையாளாகி போனேன் விதியின் வசத்தால்,
மூன்று வருடம் பிறை நிலவாய் தேய்ந்து போய், எல்லாவற்றையும் இழந்து சாவின் பிடியில் இருந்தேன்!
கவலனாய் மீண்டும் வந்து என்னை மீட்டெடுத்தவனே!
நெஞ்சம் எல்லாம் புண்ணாய் இருக்க, அதில் உன் பெயரை பொறித்து மருந்து இட்டேன்!
இத்தனை நடந்தும் உனக்காகவும், நம் காதலுக்காவும் போராடி நிற்கிறேன்...
உன்னால் மட்டுமே, என் யாதுமாகி நின்ற உன்னால் மட்டுமே!-
நம் அறை எங்கும் உந்தன் பிம்பம் நிழலடா;
உன் குரலே எங்கும் ஒலிக்க;
சுற்றி சுற்றி தேடினேன்;
இருந்தும் காணவில்லை உன்னை!
-
பதில் சொல்லும் நிலையில் நான் இல்லை, அதை புரிந்து கொள்ளும் நிலையில் நீயும் இல்லை!
இருவரும் வெவ்வேறு திசை நோக்கி சென்ற பின் ஊடல் மட்டும் என்னடா?
-
உயிர் வரை செல்லும் உந்தன் குரலால் தானோ,
என்னுள் ஓராயிரம் மாற்றங்கள்!!!
♥️♥️♥️-
உன் கண்கள் என்னை தீண்டும் பொழுதெல்லாம், இறந்து இறந்து பிறகின்றேன்!!!
♥️♥️♥️-
தண்ணீரில் கரையும் எழுத்தைப் போலவே, காதல் கண்ணீரில் கரைகிறது!!!
♥️♥️♥️-