Starting from
where we find ourselves to
ending up
where we lose ourselves,
we all do the job of
redefining us...!-
Ovo-lacto vegan
Software engineer
Hobbyist writer, mad poet 📝
Listen to my track... read more
The ultimate need for
money is to spend;
if not,
it's similar to the
crumbled posters
chewed by buffaloes.-
வண்டுகள் தேனீர் சுவைத்திடுமோ
தேனொடு ராகம் அமைத்திடுமோ
தென்றலைத் தேடிச் சென்றிடுமோ
வானிலே வர்ணம் பூசிடுமோ
கானகம் கண்டு களித்திடுமோ
விண்மீன் எண்ணி களைத்திடுமோ
இடையே நட்பு பாராட்டிடுமோ
நட்புடன் காதல் பரிமாறிடுமோ
'பூ உள்ளவரை தேனூரும்
நா உள்ளவரை கவிபாடும்'
என உளரித் தீர்த்திடுமோ
எனைப் போல் அச்சிறுவ(வா)ண்டும்...!— % &-
உனக்காக நான் எனை மாற்றிக் கொள்ள
எனக்காக நீ சுமை ஏற்றுச் செல்ல
நமக்கான வாழ்க்கை அழகானதே…!
துளிர்கின்ற காலை நமதானதே…!
எதற்காக இதயம் இடம் மாறியது…?
எதிர்பாரா தருணம் நிகழ் வாகியது…?
சலிக்காத காதல் கை கோர்த்ததோ – நம்மை
சுமக்காத நெஞ்சம் கை விட்டதோ…!
இரு வேறு துருவத்தில் இணை சேரும் பருவத்தில்
மின்னலாய் கவலைகள் கடந்திடக்
காற்றாகி ஒன்றாய் நாம் கலந்துவிட்டோமே
உனக்குள் நான் நிலையாக எனக்குள் நீ உறவாக...!-
கானக அரசன் நெறி தவறினால் கழுதைப்புலியும் காடாளும்.
மண்ணின் குடிகள் மௌனமாகினால் அநீதி மட்டுமே நாடாளும்.
தலைவனைத் தேர்வு செய்வதில் செய்த பிழை
காவலனையும் கூலிப்படை ஆக்கியது.
புரட்சிக்கு வைத்த முற்றுப்புள்ளி
சமூக சீர்கேடின் தொடக்கமானது.
அதிகாரம் இல்லா ஓர் சாமானியரின் கோபம்
வாய்மையைக் காக்கும் ஒர் ஆயுதம்.
சினங்கொண்டு வா...
உன் உரிமைகளை மீட்டெடுக்க.
சக உயிர்களுக்குக் குரல் கொடு
இல்லையேல்....
நாளை உனக்கும் இதே கதி தான்.-
ஏன் இங்கு வாழ்கிறேன்..?
எதற்காக அழுகிறேன்..?
காரணமும் காணவில்லை
அதற்காகச் சிரிக்கிறேன்...!
ஏன் இவள் வந்து விட்டாள்
என்னுள்ளே சென்றுவிட்டாள்
ஏதேதோ எண்ணமெல்லாம்
இளைப்பாறத் தொடங்கியதே...!
நிழல் தேடி குருவியொன்று
அலைந்து உடைந்து போகையிலே
எங்கோ செல்லும் மேகமொன்று
காதல் மழை பொழிகிறதே...!
இதை வரமென்று சொல்வதா..?
விழிநீரின் தடையென்று சொல்வதா..?
அன்பில் ஓர் வானே - அது
என்றும் நீ தானே...!
காலம் முழுதும்
காதல் கொள்வேனடி -
என்னோடு நீ இருந்தால்
உன்னோடு காதலனாக....!-
அடியே அழகே
அன்பின் அகரமே
காலம் கொடுத்தக் காதல் காவியமே
இசையே இலையே
இமையே இனிவளே
மௌனம் மறைத்த மாசிலா மேகமே
உயிரே உணர்வே
உலகே உறவே
துணைவியாய் தூரலிட்டத் தென்றலே
என்னவளே எனையீர்த்தவளே
என்னவென்று எழுதுவேன் - என்
கயிற்றின் கவிதாயினியே….!-
I never thought it was a love again till
you came into my life.
I started believing in miracles,
I started believing in second chances,
I started believing in love again...!-