பல நூறு மைல்களுக்கு அப்பால் நம் தேகங்கள் இருப்பினும், நம் எண்ணங்களை பகிர அந்த முழு வெளிர்நிற நிலவை நால் விழியால் இருவரும் ஒரு சேரக் காண்கிறோம். நம் உணர்வுகளை கேட்டு அந்த பௌர்ணமி நிலவும் கரைகிறதோ அனுதினம்? இறக்கம் கொண்டு மௌனம் களைவாயா சஹி, கரைந்திட்ட நிலவாய் என் வாழ்க்கை இருண்டுள்ளது. அன்பெனும் மொழி பேசி ஆவகத்தினால் ஆறுதல் செய்து, வளர்ந்திடும் நீல நிலவாக என் வாழ்வை பிரகாசிக்கச் செய்வாயா?
-
சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்
உத்தராயண பின்பனிக்காலத்தில், முன்னிரவுப் பொழுதில், வங்க கரையோரம், அவள் கரம் பற்றி உலவுகையில், கடல் அலையென ஆர்ப்பரிக்கிறதென்மனம், உவர் நீரில் தெரிவது, முழுமதியின் சுடரொளியோ இல்லை என்னவளின் வதன பிம்பமோ?— % &-
சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்!
உத்தராயண பின்பனிக்காலத்தில், முன்னிரவுப் பொழுதில், வங்க கரையோரம், அவள் கரம் பற்றி உலவுகையில், கடல் அலையென ஆர்ப்பரிக்கிறதென்மனம், உவர் நீரில் தெரிவது, முழுமதியின் சுடரொளியோ இல்லை என்னவளின் வதன பிம்பமோ?— % &-
அந்திப் பொழுதில் அம்முச்சந்தியில் அவள் உச்சந்தலை முகர்ந்து சிநேகம் கொள்கையில், இடற்படும் தென்றலினால் அசைந்து அவள் இடைப்பட்டிழையும் வஸ்திரத்தின் பட்டிழையாய் (பட்டு இழை) மாறி, என்றும் அவள் சரீரம் ஸ்பரிசிக்க ஆசை கொண்டேனடி.
-
யுகங்கள் பல காத்திருந்தேன் யுவதியே, வினவிய வினாக்களுக்கு யூகங்களே பதிலாய்...காலமே நமக்கு காலனாகிறான் சஹியே...
நின் வாடா வதனத்தை இமை துஞ்சா எனது நேத்திரங்கள் காண துடிக்கின்றனவோ...-
அந்த ஆடல்வல்லான் ஆலயத்திலே, அன்புடன் வலம் வருபவளே, அழகு பொன்மேனிதனில் கட்டுத்தறியில் தறித்த பச்சைப் பட்டுடுத்தி நீ சாரீரம் செய்கையில் என் சரீரம் மறந்தேனடி, காந்தமென கவர்ந்தாயோ என் இரும்பெனும் இதயத்தை.
-
சப்தநாடிகளும் சத்தமின்றி சண்டையிடுகிறது சஹியே உன்னுரு காண. வெள்ளி இரவு வெள்ளியும் மறைந்ததோ நாணத்தால் உம்முகம் கண்டு. மலரில்லா சோலைவனமானது என் வாழ்க்கை. வசந்த காலமாக வந்து மலரச்செய்வாயா...?
-
உன் கணைக்கண் பார்வை தொடுத்த கணைதனில், கரைந்ததோ என் கனமான கல்நெஞ்சம்.
-