Sivakumar Kamaraj   (சிவக்குமார் காமராஜ் 🥰)
6 Followers · 13 Following

Joined 31 December 2020


Joined 31 December 2020
18 APR AT 22:52

Quote

Each coin have two sides

Truth

Each coin have three sides

Front, Back and Edge

Reality

People think that Edge is the back side. You can’t see the back side until that coin turns around.

-


11 APR AT 23:44

What is the actual problem?

People hate the true version
But
Love the fake versions

-


6 APR AT 20:52

Love maximum
When you get chance
Because pain of loss
Not much fair…

-


26 MAR AT 23:58

நிலவுக்கு என் மேல்
என்ன கோவமோ
நான் பார்க்கும் பொழுதெல்லாம்
மேகங்களுக்கும் மறைந்துகொள்கிறது!

கோவம்தான் காரணமோ
என்ற சந்தேகம் எனக்கு
ஒருவேளை என்னை கண்டு
வெக்கம் கொண்டு இருக்கலாமே!

இரவில் நான் வெளியில் செல்கையில்
காதல்கொண்டது போல
என் பின்னே தொடர்ந்து வருகிறது
நான் பார்த்தால் ஒளிந்துகொள்கிறது!

என்னிடம் ஏன் இந்த நாடகம்!

-


24 MAR AT 0:21

முதல் காதல்!

அவனிடமிருந்து மொத்த காதலையும்
அனுபவித்து கொள்கிறாள்
முதல் காதலி!

அவனுடைய ஆழ்மனதில் இருந்த
குழந்தையை கொன்று விட்டு செல்கிறாள்
முதல் காதலி!

-


10 MAR AT 13:37

சிறகடித்து
வானில் பறந்தது பறவை!
தனிமை கொண்டுவிட்டது
கூண்டு!

-


6 MAR AT 11:10

ஏமாற்றம்

ஏமாற்றியவர்களை பழிவாங்க வேண்டாம்
உங்கள் வாழ்கையில் இருந்து
நீக்கிவிடுங்கள்!

என்றேனும் ஒருநாள் புரியவரும்
அவர்களுக்கு நிதர்சனம்
யாதென!

-


4 MAR AT 20:34

ஒருநாளும் யோசித்தது இல்லை
இப்படி நடக்குமென்று
நீ இல்லை என்பதை
ஏற்க மறுக்கிறது மனம்

எவர் கைகளில் கிடைத்தாயோ
அவராயினும் உனக்கான
மதிப்பு கொடுத்து பார்த்துக்கொள்ளட்டும்
நீ பத்திரமாக இருந்தால்
எனக்கு மகிழ்சியே

வேறு கவசம் வாங்கலாம்
ஆனால் அவை யாவும்
நீ ஆகாதே!
எதோ ஒரு ஓரத்தில்
நீ மீண்டும் வருவாய் என
மனம் சொல்லுகிறது

யதார்த்தம் புரியாமலும்
உன் பிரிவு ஏற்க்க முடியாமலும்
நான்!

-


3 MAR AT 0:24

என்ன தவறு செய்தேன்!

உன்னை சந்தித்ததா!
உன்னைப்பற்றி சிந்தித்ததா!
உன்னிடம் பேசியதா!
உன்னிடம் பழகியதா!
உன்னிடம் உரிமை கொண்டதா!
உனக்காக யோசித்ததா!
இல்லை
உன்னை நேசித்ததா!

-


2 MAR AT 16:32

உனக்கு சொந்தமானதை
யாருக்கும் கொடுக்ககூடாது
என என்னை திட்டியவள்!

இன்று வேறு ஒருவனுக்கு
சொந்தமாகி போகிறாள்!

-


Fetching Sivakumar Kamaraj Quotes