காதலென்பது
கொடியில் பூத்த மல்லிகையும்,
மடியில் பூத்திருக்கும் மல்லிகையும்.
-
#அன்பென்பது
என் இரு கை குவித்து அள்ளிப்
பருகிடும் ஊற்று நீராய் சில நேரம்,
இரு விரல் கொண்டு மொண்டு குடித்திடும் பானை நீராய் சில நேரம்,
வாய் திறந்து ஏற்றிடும்
மழை நீராய் சில நேரம்,
என்றிருந்தும் தாகம் என்னவோ தீர்ந்தபாடில்லை.
-
அன்பென்பது
சுற்றிலும்
பச்சையம் செழித்திருந்தும்
பட்ட மரமாய் நிற்கும்
உன்னை ரசிப்பது
💖
-
அன்பென்பது
நீ எனக்கென்பதால் எனக்கும்,
நான் உனக்கென்பதால் எனக்கும்,
நான் கொடுப்பதால் எனக்கும்,
நான் எடுப்பதால் எனக்கும்,
இருக்கும் திமிர்
😎
-
அன்பென்பது
உன்னில் நானும்
என்னில் நீயும்
நம்மில் நாமும்
செண்பகப் பூவென
வாசம் வீசுவது..-
மஞ்சள் பூவொன்று - என் சருகாய் போன வனத்தில் பூத்திருக்கிறது,
அதன் அசைந்தாடும் ஒலியில் - என் சிந்தை மயங்குகிறது,
பேரழகென வீற்றிருக்கும் அதன் ஒளியில் - என் உள்ளிருள் மறைகிறது.
உன்னசைவைப் பற்றுகிறேன் - என் வாழ்வின் எல்லைக் காணவே!
ஆம், வாழ்வை ரசித்து வாழ,
அதன் ஒவ்வொரு இதழும் சொல்லிச் செல்கின்றன.
-
அன்பென்பது
மழலையின் முத்தம் போல் சில நேரம், காதலனின் முத்தம் போல் சில நேரம்..
-
வலிகள் கூடிய
வாழ்க்கைப் பக்கங்களைப்
புரட்டிப் பார்க்கிறேன்
நான் எனும் -
என்னன்பின் வெளிச்சத்தோடு❤
-