முன்னேறி செல்லவே
அனைத்து வாகனமும்
செய்யப்படுகின்றன
பின் செல்லுவதற்காக
அல்ல-
நீ குனியும்
போதெல்லாம்
மிதி அடி தான்
யார் வேண்டுமென்றாலும்
மிதித்து செல்வார்கள்
எழுந்து செல்லும் வரை-
புரியாமல் படித்திடவில்லை
பிடிக்காமல் படிக்கவில்லை
காதலாய் பார்த்தேன்
காமமாக பார்தேன்
என்றால் இறுதியில்-
கழட்டி விடும் முன்
சொல்லி விட்டார்கள்
நான் கள்வன் என்று
உண்மைக்கு கிடைத்த
பரிசு கெஞ்சல் அசிங்கம்
புரியாமல் முளிக்கின்றேன்
யாரிடம் தவறு என்று-
நிறம் மாறிய நீர் நிலைகள்
ஆறுதலான ஆறுகள்
விவசாயின் துன்பத்திற்கு
இன்பமாய் மாறும் குளங்கள்
கண் துடைப்பாய் நில்லாமல்
காவலாக காலனிலைகள்
கசந்த கண்ணீர்
கடந்த கண்ணீராக மாறும்
எங்கள் ஊரின் தருணங்கள்
-
உரிமை கொண்டு
பேசுகிறேன்
உணர்வு குறைந்ததால்
பொய்கள் சொல்லி
உன் மனதில் இடம்
பிடிக்க நான் கள்வன் அல்ல
நீ காட்டும் அன்பிற்கு
உண்மை மட்டுமே வெளிப்பாடு.....
-
தெரு விளக்கில்
அடை பட நான்
ஈசல் அல்ல
தட்டானை சுற்றுவேன்
சூரிய வெளிச்சத்திலும்-
அடை மழை வந்து
அழிக்க நினைத்தாலும்,
படிந்த பாத
சுவடுகளாக அவளின்
நினைவுகள்
எண்ணில் நீங்கா வண்ணம்
நிறைந்து உள்ளன.....-