டுப்.. டுப்..
-
A roaring woman
அன்புள்ள அக்கா..
இல்லத்தின் இளவரசி,
இணையில்லா அழகின் அரசி,
தத்தைக்ககா... நத்தைக்ககா..
கதை சொல்லும் எங்க அக்கா.. - என்
கவலை எல்லாம் போக்கிடவா
கலங்கிடாம அசால்ட்டா..
கருவறையில் கூட இடம் குடுப்பா..
கலர் ரிப்பன் கேட்டா பல்ல உடைப்பா..
தகப்பனுக்கே அறிவுரை சொல்லுவா..
தாய்க்கும் மேலா அரவணைப்பா..
கண் கசக்கி கேட்ட போது
கடல் சிப்பி கூட கொண்டு வருவா..
கணவன் வந்த பிறகும் கூட
என்னை அவ காதலிப்பா!
-💕-
மை (MY) பேனா!
உள்ளத்தின் கதைகளை
உலகிற்கு எடுத்து காட்டி
மையால் நிரம்பி - என்
பைக்குள் அடங்குகிறாயே!
நீ எழுத்தாளனின் ஆயுதமா?
எழுத்துக்களின் அடைக்கலமா?
கை விரலோடு காதல் கொண்டு,
மை குழாயில் கர்ப்பம் தரித்து,
கவி பாடல் பிரசவிக்கின்றாயே!
நீ கவிஞனின் காதலனா?
கவிதைகளின் தாயா?
-
TRIP TO CALVARY!
Success in Scars,
Promise in Persecution,
Bestow in Bleeding,
Treasure in thorn,
Crown in Calvary,
Victory in Vile,
CHRIST IN CROWN,
CAPTIVITY GONE DOWN..
He was not dead,
Perfectly, Things were did!
-