Sindhu Thiru   (மைவிழிச்செல்வி)
55 Followers · 26 Following

பேரண்டத்தின் பேராசைக்காரி
Joined 23 August 2018


பேரண்டத்தின் பேராசைக்காரி
Joined 23 August 2018
13 MAR 2021 AT 13:24

என்னை பற்றி விவரி என்கிறாள்
அதிசயத்தை கண்டதும் வாயடைத்து போகிறவன் நான்
வாய்மொழி கூற வாய்பில்லையென்கிறேன்
நாவினால் உள்கன்னம் உப்பச்செய்து நக்கலாய் சிரிக்கிறாள்
வெட்கம் பிடிங்கித்தின்ன தலைகவிழ்கிறேன்.
ஆணின் வெட்கம் அழகு என்று சிலாகிக்கிறாள்
அவளுக்கு வெட்கச்சிறகு முளைக்க வைக்க
எனதொரு வேட்கை பார்வைப்போதும் என அவளரிவாள்
இருந்தும் தெரிந்தே சொல்கிறாள்.
நானும் தெரியாததுபோலவே பதில் பார்வை பார்க்கிறேன்.

-


21 FEB 2021 AT 1:02

உலர்ந்த உதட்டு
வரிப்பள்ளங்களை நிரப்பிட
முத்தமழை ஏந்தி வா..!!



~மைவிழிச்செல்வி.

-


8 SEP 2020 AT 13:05

நமதூடல் பொழுதுகளில்
நீ வகுக்கும் சமாதான இலக்கணங்களெல்லாம்
மரபுக்கவிதைகள்..!!
❤️
நமது கொள்வனவு சமயங்களில்
உன் ரசனைகளெல்லாம்
புதுக்கவிதைகள்..!!
❤️
நமதிரவின் நீள் கதையாடல்களில்
நீ ஒலிக்கும் 'ம்ம்ம்..' களெல்லாம்
ஹைக்கூக்கள்..!!
❤️
நமதழகை நீ விவரிப்பதெல்லாம் புனைவுகள்..!!
நமதிதழ் வழி நீ விளிப்பதெல்லாம் சந்தங்கள்..!!
❤️
மொத்தத்தில்
நீயெனது கவிதை
நானுனது கவிதாயினி..!!
❤️

-


6 SEP 2020 AT 23:00

வாழ்க்கைய
எந்த இடத்தில் இருந்தும்
தொடங்குவதற்கான துணிவை தரும்
துணை அவ்வளவு எளிதில்
யாருக்கும் வாய்ப்பதில்லை

❤️நீயெனது வரம்❤️

-


6 SEP 2020 AT 22:53

எனதுள்நாவினுள்ளே
போரிட்டுக்கொண்டிருக்கும்
வார்த்தைகளையறிய
உனதிதழ்வழியே
எச்சிலைத்தூது விடு..!!

-


26 AUG 2020 AT 19:19

Paris city(france)
Shivanasamudhra falls (karnataka)
Hambi(karnataka)
Angorwat(Cambodia)
Bali island(indonesia)

-


26 AUG 2020 AT 18:26

சில மௌனங்களுக்கு
பின்னால் வேண்டுமானால்
சம்மத்தமிருக்கலாம்
பலதுகளுக்கு பின்னால்
அவமானமும் நிராகரிப்புமே..!!

-


21 AUG 2020 AT 22:31

சாக்கடையில் பூத்த
நறுமணமலரென
கவி படைக்கும் கவிகளே
மலரின் நறுமணத்தை
மட்டும் நுகருங்கள்
அதன் பூர்வீகம் நமக்கெதற்க்கு..!!

-


4 JUL 2020 AT 22:39

நிபந்தனைகளுடன் நீ..!!
நிராசைகளுடன் நான்..!!

-


26 JUN 2020 AT 11:00

தகுதிய மீறி
ஆசப்பட்டுடது தப்புனு
நினைச்சிட்டு இருந்தா
இப்பதான் தெரிது
நம்ம தகுதிக்கு
ஆசப்பட்றதே தப்புனு..💔

-


Fetching Sindhu Thiru Quotes