வாழ்க்கை அர்த்தம் மிகுந்தது. ஒவ்வொருவர் வாழ்க்கைக்கும் ஒரு காரணமும் அவசியமும் இருக்கிறது.
அதை அறிந்துகொள்வதும் அறியாமல் கடப்பதும் அவரவர் தேடுதல் தொடர்பானது.
ஆனால்,
எந்த மனிதனும் தேவையற்றவன் இல்லை;
எந்த வாழ்க்கையும் பயனற்றதும் இல்லை.-
நேற்றிலிருந்து கற்றுக்கொள், இன்றைக்காக வாழ், நாளை மீது நம்பிக்கை வை.
ஒவ்வொரு நாளும் பல வித்தியாசங்களை அறிமுகம் செய்கிறது வாழ்க்கை.
அன்பு, துரோகம், கவலை, மகிழ்ச்சி, மாற்றம் போன்றவைகளை பிரித்தறிவதற்குள் வாழ்க்கை முடிந்து விடுகிறது.
ஒவ்வொருவருக்கும் பக்குவமடைவதற்குத் தேவைப்படும் காலம் வெவ்வேறானது என்பதைப் புரிந்துகொண்டு பயணியுங்கள்.
எதுவாயினும் மிகுந்த கவனத்துடன் தேவைக்கேற்ப தேர்வு செய்யுங்கள். ஏனென்றால், இன்று தேவை என்பது நாளை தேவையற்றதாக மாறுகின்றது-
சந்தோசம் என்ற பெயரில்
கவிதை எழுத சொன்னார் நண்பர் ..,
வாழ்க்கை என்னும் பாதையில்
சந்தோசம் என்னும் போதையில்
சிரித்துகொண்டு கடந்து செல்வோம்...!!!
ஏனென்றால் எண்ணங்கள் எப்படி அமைந்தாலும்,
ஏக்கங்கள் ஏற்படுத்தும் தாக்கங்கள்,
என்றும் நம்மை தவிர்ப்பதில்லை...!
இமயம் தொடும் வசதி இருப்பினும்,
சந்தோசம் இல்லையேல்,பயனில்லை..
பாதாளம் தொடும் வறுமை இருப்பினும்,
சந்தோசம் இருந்தால்,துயரில்லை..
"இவ்வுலகில் விலைமதிப்பில்லாதது
உன் சிரிப்பும்,சந்தோசமுமே"
-
கனவுகள்
மிக சுலபமாக
"முளைத்து" விடுகிறது
அறுவடை செய்யத்தான்
காத்திருக்க வேண்டியதாக
இருக்கிறது....-
துயரங்களோடு வாழ்
துயரங்களோடு சிரி
துயரங்களோடு ஒன்றை நேசி
தோற்றுப்போன வாழ்க்கை ஒன்றும்
அவ்வளவு இழிவானதல்ல.
பரவாயில்லை இருப்பதை வாழ்.-
ஓடத்தெரிந்த
இரயில் பெட்டிக்கும்,
ஓடத்தெரியாத
இரயில் தண்டவாளத்திற்கும்
இடையிலே ஓடுகிறது
இரயில் பயணம்....-
வாழ்க்கையில நான் அதிகமா பயந்த இடம்னா அது மத்தவங்க என்ன பத்தி தவறா எதும் நினைச்சிருவாங்களோ என்றது தான்
ஒருகாலத்துல நான் பண்ண எல்லாத்தையுமே நிரூபிக்க தடுமாறி இருக்கேன்..
நான் இத பண்ணுனது இதுக்காகத் தான்
நான் அத பண்ணலனு
மத்தவங்களுக்கு புரிய வைக்க அதிகமா நேரத்த ஒதுக்கி இருக்கேன்
ஆனா இப்ப
யாரிடமும் கோவப்படுவதாக இல்லை,
வாதிட்டு புரியவைப்பதால் நிகழ்தல் தான் என்ன... ?
எல்லோரிடமும் ஏதோ ஒரு நியாயம் அவர்களுக்கு இணங்க ஒளிந்து இருக்கிறது
சிரித்து விட்டு கடந்து வர பழகி கொண்டேன்..
நான் செய்றது என்னுடைய மனசாட்சிக்கு சரியாக இருந்த போதும் என்று-
பெரிதாய் எதுவுமில்லை
நலமா?
எனுமொரு சிறிய விசாரிப்பு....
பத்திரமாய் இரு
எனும் ஒரு சிறிய அக்கறை.
நான் இருக்கிறேன்
எனுமொரு சிறிய ஆறுதல்.
அவ்வளவுதான்
அன்பின் பெரும் பிரார்த்தனையெல்லாம்.-
எதைக் கேட்டாலும்,
கஷ்டத்தையே
கொடுக்கிறாய்...
கஷ்டத்தைக் கேட்டால்,
எதைக் கொடுப்பாய்...
கடவுளே😔-
வாழ்க்கை.!
தீர்க்க முடியாத சில வலிகள்
ஆறாத மன ரணங்கள்
மறக்க முடியாத துரோகங்கள்
மறையாத ஒருசில நினைவுகள்
பல சொர்ப்ப சந்தோஷங்கள்
இவற்றில் ஏதோ ஒன்றின்
துணையின்றி யாருமில்லை.
இவையின்றி யாரும் தனியாய்
வாழ்ந்ததில்லை வாழ்வதில்லை.-