மங்கையாய் பிறந்திட
மாதவம் செய்வதைவிட
மங்கையராய் வாழ்வதற்கே
மாதவம் செய்யவேண்டிய காலகட்டமிது....
கண்ணும் கருத்துமாய் காக்கவேண்டிய
காளைகளே
காட்டுமிராண்டியாய் நடந்திட
மகளிர் தினம் மட்டும் மதியா.....
என்இனமே எதிர்வரும் இன்னல்களை
எஃகு இயந்திரமாய் மாறி எட்டிமிதி!!
இமயமலையும் தாண்டும் உன் அடிகள்
இனி மாற்றும் எல்லையில்லா விதிகள்!!
-
கண்ணனின் சேவகி..
அன்பு அங்காடியின் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உடலும் ஆரோக்கியமும்
ஒரு மனித வாழ்வின்
அடிப்படை அங்கமாகும்..
உணவும் மன நிம்மதியுமே
அதை சீராக வைத்திருக்க உதவுகிறது
ஆரோக்கியமான
இயற்கை உணவை உண்டு
நல்ல எண்ணங்களை வளர்த்து
சீரும் சிறப்புமாக வாழ்வோம்!!
2024 இன்பமான ஆண்டாக
அமைய வாழ்த்துக்கள்!!
✨✨✨✨✨✨✨✨-
இன் நாளை எண்ணி
தன் வாழ்நாள் முடிய
பல இன்னல்களை
எதிர்கொண்ட
ஏராளமானோரின்
வாழ்த்தொலியே
நமக்கு கிடைத்த சுதந்திரம்!!!!
பார் போற்றும் பாரதம் படைப்பதே
அவர்களுக்கு நம் செய்யும்
மரியாதையாகும்!!!-
சுட்டெரிக்கும் சூரியன் கூட
சுடவில்லை!!
என் தனிமையுடன்
நான் தங்கியிருக்கும்
வேலையில்...
பல சமயங்களில்
தனித்து சிரித்து
கடந்து செல்வதே
தாராளமானதாக
இருக்கிறது!!!
-
பரிசுகள் என்றாலே பிரியம் தான்..
பிரியத்திலும் பிரியம்
பிடித்தமானதை பெறுவதுதான்..
பிடித்தவர்களுக்கு பிடித்ததை அறிந்து
பிரியத்துடன் பரிசளிப்பது
பிரியத்திலும் பெரும்பிரியம் தான்...
நீண்ட நாள் ஆசை
என் பிரியமான கண்ணன்
நீல் வான் விட்டு
என் வான் வாழ வந்துள்ளான்!!!
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
-
பால்வெளி பரந்திருந்தும்
வீடென எதையறியேன்...
சொந்தம் கொண்டாட
சொந்த உடலே
சொந்தமில்லையேல்!!!-
கூர் தீட்டிய ஈட்டி என்னில்
இறங்கும் நொடி!!
கட்டியணைத்து கூர்மையின்
வேகத்தை அவன் தேகத்திலும்
ஏந்திக்கொள்கிறான்!!
பிடிமானத்துடன் கூடிய
இரத்தகசிவு மருந்தாக
மாறும் அற்புதம்
அவனிடத்தில் மட்டுமே!!-
தேடி துரத்தினால்
தூரப்போகும்!!!
வேண்டாம் என
விட்டால் அருகில்
அசைந்தாடும்!!!
நிழல் போல
அவன் காதல்!!!
நிஜமுள்ளவரை
நிழலும்
நிலைக்கும்!!
-
He is very much concern
about his hardwork
more than his results...
The cool lion leads his
aggressive lionets in a
massive ground along with
more confidence...-