எப்போதும்
எதையும்
எதிர்பாராமல்
நமக்கென துடிப்பது
நட்பு மட்டும் தான்-
Love towards writing and reading makes me happier.
I love to g... read more
உணவுக்கான திருநாள்
உழைப்புக்கான திருநாள்
உணர்வுகளுக்கான திருநாள்
உறவுகளுக்கான திருநாள்
உலகத்துக்கு பொது திருநாள்
இது பொங்கல் திருநாள்
இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்!!-
இன்று வாழ்க்கையில்
இருள் இருக்கலாம்
ஆனால் ஒரு நாள்
வெளிச்சம் வரும்
இன்பம் தரும்!!-
உழுது விதை விதைத்து
நாற்றிட்டு நீர் பாய்ச்சி
செழிய வளர வைத்து
அறுவடைக் கதிர் அறுத்து
நெல் எடுத்து அரிசியாக்கி
புத்தரிசியை பொங்கலன்று
பொங்கச் செய்த விவசாயக் கடவுளுக்கு நன்றி!!
போனதெல்லாம் போகியில் போகட்டும்
புதியவை புத்தரிசியாக மகிழ்ச்சியாக பொங்கட்டும்!!!
இனிப்பான பொங்கல்
இனிமையான குடும்பம்
இன்பம் பொங்க நல்வாழ்த்துக்கள்!!
-சிவா
மரபோன் நலம்சார் பொருட்கள்-
வெப்ப சலனம்
சட்டென கருமை பூசிய மேகம்
தென்றலை உணரும் தேகம்
மெல்லியதாய் ஒரு சாரல்
முத்து முத்தாய் தூரல்
காவிரியே கரை புரண்டு
வானிலிருந்து வந்தது போல்
சின்னதாய் ஒரு மழை
வெயிலுக்கு வாந்தால் அழகு...
சில்லென மழை நினைவுகளில்
மனதை நனைத்து மகிழ்வோம்
வெயிலின் தாக்கம் மறப்போம்.
-சிவா-
ஏற்றும்
விளக்கில் விரல்
வைத்தால் மட்டும்
சுடுவதில்லை
குளிர்கிறது
என் விரல்களை
முத்தமிடுகிறதோ?
-
பாரதி கண்ட
புதுமைப் பெண்கள்
காதலின் பெயரில்
காயம் கொள்கிறார்கள்!
சொல்லவும் முடியாது
மெல்லவும் முடியாது
செத்துக் கொண்டிருக்கிறார்கள்!
சுதந்திரமாய் திகழ்பவர்களை
தந்திரம் செய்து வீணாக்குகிறார்கள்!
காதல் கொடிது! ஆசை ஆபத்தானது!
பத்திரம் பெண்களே!
- சிவா
-