சளி இருமல்
பிரச்சனை வந்தால்
மருந்து மாத்திரையை
தேடும் நாம்,
மிளகு சுக்கு
வீட்டில் இருப்பதை
மறந்துவிடுகிறோம்-
எழுத்துக்களை கற்பனை💘
தமிழில் 😍💕
உயிர்ப்பிக்கிறேன்...🥰
இருந்தும... read more
காதல் தோல்விகள்
தொடர்ந்து கொண்ட சென்றால்
காதலித்தவர்களை கைவிடுங்கள்
காதலை அல்ல...!
சரியான துணையை
தேர்ந்தெடுத்து
முறையான வாழ்வில்
இணைந்தி(டு)ருங்கள்...!-
காதலால் கைகோர்த்த
உயிர்களின் திருமணம்
காலங்கள் கடந்தாலும்
கைகள் பிரிவதில்லை
உயிர்கள் இறந்தாலும்
உணர்வுகள் மறப்பதில்லை...!-
ஒட்டாரம் கொண்டு
நீ நழுவும் பொழுதெல்லாம்,
உன் வேட்கைக்கு
தகுந்தவை போல்
கொஞ்சியும் கெஞ்சியும்
கா(மம்)தல் செய்வேன்.
-
உனக்காக எழுதப்பட்ட
அத்தனை கவிதைகளையும்
எச்சில் முத்தங்களாய் வாசித்து
உதட்டில் நிரப்புகிறேன்,
வாசிப்பது பிடித்திருந்தால்
துளையின் பிணைப்பில்
வேர்வை துளியில்
பதில் கவிதை கூறு...!
-
கனவுகள் கூட
கணவன் மனைவிற்க்கு தான்
முன்னுரிமை அளிக்கிறது,
காதலர்களாக கனவுகள் வேண்டி
இரவுகளிடம் மன்றாடி
உன் நினைவுகளுடன்
உறங்க செல்கிறேன்..
-
ஒவ்வொரு செயல்களின்
பின்னால் கண்டிப்பாக
மாற்றங்கள் இருக்க வேண்டும்
மாற்றங்கள் நிகழாத
எந்த செயல்களுக்கும்
வாழ்வில் பயனில்லை-
நகர்ந்து கொண்டே இருக்கின்ற
காலங்களுக்கு ஏற்றவாறு
வாழ்கையில் சிந்தனைகளை
வளர்த்துக்கொள்ள வேண்டும்.-
வாழ்க்கைக்கு தேவையான
சரியான வழியை,
சரியான நேரத்தில்
தேர்ந்தெடுக்காமல் இருப்பதும்
ஒருவகையான முட்டாள்தனமே.
-
முயற்சிகள் எதுவுமின்றி
இருக்கின்ற இடத்தில்
இருந்து கொண்டு
சாக்கடை அரசியலையும்
சாதி அசைவுகளையும்
தினந்தோறும் அசைப்போட்டு
மென்று கொள்கிறோம்
வாழ்வில் முன்னேற்றம்
இல்லை என...
-