ஆண் அழகின் உச்சம்
வெக்கம் கொள்ளும்
அந்த தருணம்...
அவளையும்
மிஞ்சிய அழகிய
கவிதைகள் என்பேன்
அவன் வெக்கம்
பார்வையில் வந்து
போகும் நொடிகள்..-
நிழலும் இல்லை
என நினைத்து விட்டேன்
நிலவே நீ இருக்கிறாய்
என்பதை மறந்து விட்டேன்
உனை தொட உயரம்
தேவை இல்லை
உணர்ந்தாலே போதும்.
தரை இறங்கிய நினைப்பு
எனக்குள்..-
உனை
பிடித்துக்கொண்டிருக்கும்
காலம் வரை வழி எல்லாம்
ஒளி விம்பங்களாய்
மிளிரும் என்பதில்
சிறிதும்
ஐ(ப)யம் இல்லை.."-
ஒவ்வொரு
சூரிய உதயத்திலும்,
நான் உன் ஒளியைக்
காண்கிறேன்,
நீ என் இருளை
பிரகாசமாக
மாற்றுகிறாய்
உன் அன்பே,
நட்சத்திரங்கள்
அணிவகுத்து
நிற்பது போல
பிரகாசிக்கிறது,-
ஒரு போதும்
அன்புக்காக
மட்டும்
கை ஏந்தி
நிற்காதே!!
அசிங்கப்பட
வேண்டியுருக்கும்..-
இலகுவாக
ஏற்றுக் கொள்ள
முடிவதில்லை எதையும்
பறக்க துடிக்கும்
எந்த இதயத்திற்கும்,
கடுமையான
நிலவரங்களை
பதம் பார்த்து
நொந்து போய்
வேதனை
பட்ட பின்பு தான்
ஓரளவேனும்
ஏற்றுக் கொள்ள
கற்றுக் கொள்கிறது
இந்த மனதும்-
இவள் மௌனத்தில்
கதை பேசுகிறாள்
எத்தனை புத்தகங்கள்
வெளிவருகிறது என்று
பொறுத்திருந்து பார்ப்போம் 😁😆-
சறுக்கி விழுந்த
இலை தத்தளித்த
எறும்புக்கு ஓடமானது
வாழ்க்கை பயணமும்
தொடர்ந்தது...
-
தவமான நேரங்கள்
தவித்த தவிர்ப்பு கள்
தீரட்டும்
இரு மனங்களும்
இணைய
இன்னிசை கானங்கள்
இசைக்கட்டும்
அழகான உறவினை
அலங்கரிக்கும்
அதிசய பூந்தோட்டம்
அடிக்கடி அன்பாக
தென்றல் இங்கே
வந்து மோதட்டும்
-