நெஞ்சில்
இருக்கிறாய்
நினைவில்
இருக்கிறாய்
கண்ணில்
இருக்கிறாய்
கனவில்
இருக்கிறாய்
உணர்வில்
இருக்கிறாய்
உயிரிலேகூட
இருக்கிறாய்
ஏனோ என்னருகில்
மட்டும்
இல்லாமலேயே
இருக்கிறாய்..-
சொல்லவில்லை தான்
என்றபோதும்...
அவளுக்குள்ளும்
இருக்கிறது
அணு அணுவான
என் மீதான நேசம்..-
என் மன வானில் சோக மேகங்கள் சூல் கொண்டுத்
திரிகின்றன..
கொட்டித் தீர்க்க குளிர்க்காற்று எப்போது
தீண்டுமோ..??-
ஒவ்வொரு முறை
மனம் தளரும் போதெல்லாம்
ஔடதமாய்
எனக்கு ஆறுதலளித்துக் கொண்டிருந்தது
உன் உரையாடல் மட்டுமே..
ஆறுதல் தேடும்
அனாதையாய் நான்...-
உன்னை
இழந்த போது
வருத்தப்படவில்லை.
ஆனால்
இழந்த நாளிலிருந்து
வருத்தப்படாத
நாளே இல்லை..-
உன்னை விடுவிக்கிறேன்
என்னிடமிருந்து,
மாறிக் கொண்டே இருக்கும் என் மனநிலையிடமிருந்து,
உன்னை நேசிக்கும் என் கிறுக்குத்தனமான ஆசையிடமிருந்து,
வேறு எவரையும் விட உன் மீது அக்கறை கொள்ள வேண்டும் எனும் எனது ஆர்வத்திடமிருந்து
உன்னை நான் விடுவிக்கிறேன்
என் மகத்தான பாதுகாப்பான நேசத்திலிருந்தும்
என்னிடமிருந்தும்
முழுமையாக உன்னை விடுவிக்கிறேன்.
என்னைப் போல் எவராலும் உன்னை நேசிக்க முடியாது என்று உணரும் போது திரும்பி வர வேண்டாம் என்று உன்னைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.
தயவு செய்து திரும்பி வராதே.
-
என் அத்துனை
துயரங்களுக்கும்
நீயே ஔடதமென்று
நானிருக்க..
ஒற்றை வார்த்தையில்
சொல்லிவிட்டு சென்றாய்
நினைக்காமலிரு...
முயற்சிக்கிறேன்
முடிந்தவரை.
அதுவும் நீ சொன்னாய்
என்பதற்காக..!!
-