பாரிஜாதம்.
அங்கும் இங்குமாக
ஓடி திரிந்து
ஒற்றை பார்வையில்
என்னை
சிறைபிடித்தவளுக்கு
தெரியவில்லை
நாம் புகைப்படத்தில்
சிக்கிக்கொண்டோமே
என்று..☺️
பகலிலும் பூக்கின்ற
பாரிஜாத மலர் இவள்..
குறுநகையால் கொஞ்சி
பேசிடும் சின்ன
பூங்குழல்..
எங்கள் வீட்டு
சுட்டி கண்ணம்மா♥️
-
பிறர் காத்திருக்கும் தருணங்க... read more
ஒட்டிய உறவுகள்
பிரிந்து.. பிரிந்து..
பிறகொருநாளில்
உயிர் பிரிவது தான்
வாழ்க்கையோ..!
பிரிவென்னும் வலியை
தாங்கிக்கொள்கிற வரம்
ஒன்று கிடைத்தப்பின்
பிறகென்ன வரம் கேட்பேன்
இறைவா உன்னிடத்தில்..?
-
செங்கவி #100
தமிழுக்கும் தமிழ் அன்னைக்கும் 🙏
கவிதை எழுத பழகிய நாட்களில் செங்கவியும் பொன்மொழியும் என்கிற தலைப்பில் கவிதை தொகுப்பாக புத்தகம் எழுதிட ஆசை இருந்தது பொருளாதார சூழல் காரணமாகவே அந்த எண்ணம் கைவிடப்பட்டது, எனினும் yourquote தளத்தில் செங்கவி என்கிற புணை பெயரிலாவது எழுதுவோம் என்று ஆரம்பித்த கவிப்பயணம் இன்று 100ஐ கடந்திருப்பதில் மகிழ்ச்சி.சக கவிஞர்களுக்கும் நல்லதொர் கவிப்பயணம் அமைந்து உற்ற அங்கீகாரம் கிடைக்கட்டும்.-
ஓயாத மழையில் பிரிந்த
ஒற்றை சாரல் துளியின்
தீராத தவிப்பு எப்படியோ..
அப்படியான இவரது எழுத்துக்களை
என் சொல்வேன்?..
தாளாத தனிமையில் தவம்
செய்திடும் தனிமரம் ஒன்றை
தடம் புறண்ட தென்றல் ஒன்று
தலை கோதல் செய்வது போன்ற
இவரது கவி நடையை
என் சொல்வேன்?..
உறைந்திட்ட மனதில்
உதிர்ந்திட்ட உரையாடல்களை
எதார்த்த எழுத்துக்களில்
தருகின்ற தோழி
தீபா வின்
கவிகள் யாவும்
என்றும் என் மனதில் பதிந்த
காதலுக்கும்
காதலனுக்குமான
ஒரு புதிய அத்தியாயம்.
-
அனைத்து குறுநகையும்
இன்பத்தின்
பிரதிபலிப்பாக
இருக்க முடியாது..
அது வறண்ட
கண்ணீர்க்கடலின்
கரை சேர்ந்த
கடைசி
சிற்றலையாக கூட
இருக்கலாம்..-
சொல்லாத சோகங்களை
மெல்லாத மவுனங்களில்
மறைத்துவிட்டேன்..
பொல்லாத பொழுதுகளை
இல்லாத இடைவெளியில்
தனித்துவிட்டேன்..
அடிக்கோடிட்ட
அன்றாட வாழ்வின் பிழைப்பில்.-
எவர் ஒருவரையும் மதிப்பிடுவது என்பது, நம்மை நாமே சோதித்துக்கொள்வது போலாகிவிடுகிறது.
-
கண்மூடித்தனமான கருணை..!
ஆம்..
உடைந்த கண்ணாடி என்பதை அறிந்தும் அதை மீண்டும் உடைக்கிற
கைகளின் செயல்.-