நம்பிக்கை!
பிரச்சனைகள் எல்லாம்
தீர்ந்து போகும் தன்னாலே
நம்பிக்கை நிறைந்த மனிதன்
வாழ்வில் எப்போதும் வீழ்வதில்லை!
படகு கவிழ்ந்த போதிலும்
துடுப்பை பற்றி கரை சேரலாம்!
துடுப்பு உடைந்த போதிலும்
வெள்ளப்போக்கில் கரை ஏறலாம்!
கலக்கம் இருக்க தெளிவு ஏது!
விளக்கம் பிறக்க தடை ஏது!
நம்பிக்கை வைத்திடு
நாளை நம்வசம்!
-செல்வா!-
ராதை!
எங்கள் வீட்டு ராதையே
எங்கும் உந்தன் பாதமே
காத்திருந்த எங்களுக்கு வரம் நீ!
பார்த்திருந்த எங்களுக்கு வளம் நீ!
உந்தன் சிரிப்பு சத்தம் ஒலிக்கட்டும்
உந்தன் புன்னகை வாசம் கமழட்டும்
உந்தன் மழலை மொழி மலரட்டும்...
இனிய கிருஷ்ண ஜெயந்தி
வாழ்த்துக்கள்...
-
முடிவு!
வாழ்வில் முடி வெடுக்கும்
திறனை வளர்த்துக்கொள்ளுங்கள்!
இல்லையேல் பிறர் முடிவை ஏற்றுக்கொண்டு
நடக்க கற்றுக்கொள்ளுங்கள்!
இரண்டிற்கும் நடுவில்
இருத்தல் எங்ஙனம் தகும்!
மனமும் உழலும் நாளும் புறளும்!
ஏற்றுக்கொண்ட முடிவிற்கு
சூழ்நிலைகளை பலிபோடாதீர்கள்!
கடக்க நினைப்பவனுக்கும் வெள்ளமும்
அடைய நினைப்பவனுக்கு சிகரமும்
கடினமாக ஒருபோதும் தோன்றியதில்லை!
-செல்வா!-
இனிய சுதந்திரதிருநாள்
நல்வாழ்த்துக்கள்!
பார் முழுவதும் பறை ஒலிக்க
ஊர் முழுவதும் குதுகளிக்க
பெற்ற சுதந்திரமே அதை
பேணிக்காப்போமே!
முன்னோர்கள் செய்த தியாகம்
முன்னோர்கள் இட்ட உழைப்பு
அதை நினைவில் கொள்வோமே!
இந்திய தேசத்தை முன்னோடி ஆக்குவோமே!
இந்திய தேசத்தை முதலாவதாக ஆக்குவோமே!
இதை உறுதி ஏற்று இத்திருநாளை
கொண்டாடி பெருமை சேர்ப்போமே!
-Iniyatamilselva.blogspot.com
-
வெற்றித்தோல்வி!
வெற்றியும் தோல்வியும் வாழ்வின் அங்கமே!
தோல்விகள் எல்லாம் வெற்றியின் படிகளே!
தொடர்ந்து ஓடுபவன் எல்லையை அடைகிறான்
இடையில் நின்றவன் அங்கேயே தங்குகிறான்!
எதிர்மறை கருத்தை எவரும் சொல்லலாம்
உழைப்பை எள்ளலாம் இளக்காரம் செய்யலாம்!
இவைகளை சட்டை செய்யாமல்
பாதை மீது பார்வை வைத்து
ஓடிக்கொண்டே இருக்க
அடைவது இலக்காகவும்
பெறுவது வெற்றியுமாகட்டும்!
-செல்வா!
-
வாழ்நாள் சாதனையாளர்!
சிலர் முன்செல்வார்
சிலர் பின்செல்வார்
எவர் முன்வந்தாலும்
எவர் பின்சென்றாலும்
நமக்கென்ன அதனால்
எனது பாதை வேறு
எனது பயணம் வேறு
எனது வெற்றியும் வேறு!
பிறருடன் ஒப்பிடுவதும்
பிறருடன் மோதுவதும்
அல்ல வாழ்க்கை
தன்னை வெல்பவனே
வாழ்நாள் சாதனையாளன்!
-செல்வா!-
காற்று!
வாழ்வில் சிலநேரம் நமது பக்கம் காற்று வீசும்
நடுக்கடலில் தத்தளித்திருந்த தனிப்படகிற்கு
கரை ஒதுங்க கிடைத்த வாய்ப்பாக பயன்படுத்தி
எட்ட வேண்டிய இலக்கை அடைந்திடுவோம்!
ஏன், சில நேரம் தொட முடியாத
இலக்கையும் தொட்டு மைல்கல்
நட்டிடுவோம் வெற்றியடைவோம்!
பட்டம் போல் வானில் பறப்போம்!
வட்டம் போல் சுற்றாமல் பறந்திடுவோம்!
புதிய எல்லைகளை விரிவாக்குவோம்!
பற்பல வரலாற்றை உருவாக்குவோம்!
-செல்வா!-
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தந்தையே!
நான் இளைப்பாறிய நல்ல மரம் நீங்கள் தான்!
நான் களைப்பாறிய நல்ல நிழல் நீங்கள் தான்!
நான் படித்த பள்ளி உங்கள் செயல்கள் தான்!
நான் ரசித்து மகிழ்ந்த நாயகன் நீங்கள் தான்!
நான் பார்த்து வியந்த உழைப்பாளி நீங்கள் தான்!
மரம் போல் எங்களை அரவணைத்தீர்கள்!
அதன் பயனால் திளைத்திருக்கின்றோம்!
நன்றியால் சுருக்க இயலாது!
வேண்டுதல்கள் பெருக்குகிறோம்!
இனிய பிறந்தநாள்
நல்வாழ்த்துக்கள் அப்பா!
-செல்வா வேணி-
திருச்சிற்றம்பலம்!
வந்ததும் வருவதும் அவன் செயல்
சேர்ந்ததும் சேர்ப்பதும் அவன் செயல்
கடந்ததும் கடப்பதும் அவன் செயல்
நடந்ததும் நடப்பதும் அவன் செயல்
எல்லாமே அவன் செயல்!
-செல்வா!-
மழை!
எந்தன் மாலை இத்தனை நறுமணம் வீசுகின்றது ஏன்?
மழையே உந்தன் வருகைதான் காரணமா என்ன?
மண் குளிர்ந்து மணக்கின்றது!
புல் சிலிர்த்து நீர்த்துளி சுமக்கின்றது!
மரம் நனைந்து பசுமையாய் தளிர்க்கின்றது!
பூக்கள் பூத்தவண்ணம் சொரிகின்றது!
எந்தன் மாலை இத்தனை அழகானால்!
தினம் உன் வரவை எதிர்பார்ப்பேன்!
வந்து வண்ணங்கள் சேர்த்திடு மழையே!
-செல்வா!-