பரவால்ல எவ்வளவு மோசமான சூழ்நிலை வந்தாலும் ஆண்டவன் அருள் இருக்கு, அவன் மட்டுமே துணை என்று சத்தமிட்டு சொல்கிறான்... இன்னல்களின் இரைச்சலின் நடுவே அசரீரியாக அவன் அமைதி தருகிறான்...
-
ஊழ்வினை பயனால் எல்லோரும் எதையோ தேடி திரிகின்றார்கள் நான் உன்னையே உணர்ந்தவன் எனக்கு ஏன் பரிட்சை ?
- மருதீசா-
நினைவு தெரிந்த நாளிலிருந்து இன்று வரை வாழ்ந்த வாழ்க்கையை திரும்பி பார்கிறேன் என்னிடம் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு பெரிதாக எதுவும் இல்லை...சில இலக்குகளை தவிர...பெருமை பட ஒரே ஒரு விஷயம் இருக்கு பணம் பதவி தகுதி இவைகளை தாண்டி நான் நேசிக்கும் சில மனிதர்களுக்கு நான் உண்மையாக இருப்பதுதான் அவர்கள் வாழ்வில் எனக்கு கொடுத்த இடத்தை வேறு யாராலும் நிரப்ப முடியாது....
-
ஒரு தேநீர் அருந்தும் இடைவேளை நேரத்தில் அவள் மொத்த சோகத்தையும் கொட்டி தீர்த்துவிட்டாள் அவள் பிரச்சினை சிரியதல்ல அவள் இருக்கும் சூழல் விசித்திரமானது அவளுக்கு ஆறுதல் கூட சொல்ல முடியாமல் ஊமையானேன், நான் வாழவா சாகவா என்று நூறுமுறை கேட்கிறாள், இதே கேள்வியை நானும் என்னுள் பல முறை கேட்டு மீண்டு வந்ததேன், என்னை குறுகிய காலத்தில் நம்பி அவள் அனைத்து பிரச்சனைகளையும் சொல்லி விட்டாள், அவளுக்கு ஆறுதலாக மட்டும் இல்லாமல் வழிகாட்டியாக அவள் அனைத்து பிரச்சனையிலிருந்து மீண்டு வர துணையிருப்பேன் ...
வேண்டுகிறேன் இறைவனை இன்றிலிருந்து அவளுக்காகவும்...
அவள் வெற்றி அன்பின் வெற்றி...
அவள் தோல்வி கருணையின் வெற்றி...
(அறத்தின்)-
தோழி தூண் மீது சாய்ந்து அழுகிறாள் நான் கல்லாக கடந்து செல்கிறேன் ஆனால் எண்ணுள்ளும் ஈரம் உண்டு...
(மந்திரங்கள் ஓத கைலாய வாத்தியங்கள் முழங்க மனம் விட்டு கதறி அழுகிறாள் என் கண்ணில் கண்ணீர் வருகிறது)
இடம்: அண்ணாமலையார் கோவில்....
(பிரதோஷம்)
பலத்த மழை அன்று....-
Secret of success
நான் 25 வருடம் ஒரு இலக்கை அடைவதற்கு போராடினேன் என்னால் அதை அடையவே முடியவில்லை அதனால் என் இலக்கை மாற்றினேன் நான் முயற்சித்து தோற்ற இலக்கை பிறர் அடைய உதவினேன் இப்போது என்னால் 1000 பேர் இலக்கை அடைந்துள்ளனர்...
இந்த முடிவெடுக்க காரணம் அவர்கள் மனநிலை எனக்கு நன்கு தெரியும் நான் போராடிய காலகட்டம் எனக்கு உதவ யாரும் இல்லை எனக்கு நல்ல மனிதர்கள் நட்பு கூட கிடைக்கவில்லை அதனால் எனக்கு என்ன வாழ்க்கை இது இருப்பதற்கு பதில் இறப்பது மேல் என்று தோன்றும் இந்த எண்ணம் என்னோடு கடைசியாக இருக்கட்டும் என்று எண்ணினேன் ...
என் மாணவர்கள் அனைவரும் மரணத்தை தான் முதலில் வென்றார்கள்...
என் வெற்றி என்பது காலப்போக்கில் நிறைவான மனநிலையாக மாறியது அதுதான் நிஜமான வெற்றி என்று பின்னாளில் உணர்ந்தேன்...
நன்றி என் அனைத்து தோல்விக்கும்...-
நிறமில்லை மணமில்லை நீயின்றி அமையாது எவ்வுலகும்
நன்றி
22.3
உலக தண்ணீர் தினம்-
நண்பனின் நலம்
நம்பிக்கை விதையை நாளும் விதைக்கும் என் நண்பன் அனைத்தும் இழந்து நிராயுதபாணியாக நிற்கிறான். அவன் சிரிப்பை நிறுத்த முயற்சிக்கிறேன் முடியவில்லை... என்ன வாழ்க்கையோ புரியவில்லை வழி கட்டியவனே வீதியில் யாசகனாகும் போது வலி தாங்கமுடியவில்லை...
இறைவனுக்கே சாபமிடுகிறேன்...-