தனிமை போராட்டம்...
இவ்வுலகமே போராட்டம் நடத்தி வரும் இவ்வேளையில் மனிதகுலம் மட்டுமின்றி நம்மை சுற்றி உணவால் தவிக்கும் பறவைகள்,விலங்குகளையும் காப்போம் "பசி" என்னும் கொடுமையில் இருந்து...
காலத்தின் அருமை
அதை பயன்படுத்தி வெற்றி காணும் நேரத்தில் மட்டுமே புரியும்.
இன்றும் அதே நேரமே,
"தனிமை" என்னும் போரட்டத்துடன்
"குடும்பம்" என்னும் அழகிய
பறவைகள் நிறைந்த கூடுடன்
வெற்றி என்னும்
அழகிய விடியலை காண...
#Stay_Home #Stay_Safe
#Corona_Battle #Colours_of_pollachi
-
கொரோனா காலம்...
தனிமை கூட
உன்னை
தினந்தினம்
நினைவுபடுத்துகிறது
என் செல்பேசியில்
உன் "கவிதை"
தொடங்கி
என் "கவிதை"
தொகுப்பு வரை!!!-
காதல் நாடகம்...
காணும் இடமெல்லாம் நீ...
கனவிலும் நீ..
கனாவிலும் நீ..
உனக்காகத்தான் உன்னை
அடையத்தான் பிறந்தேனோ
மனிதப் பிறவியாய் இவ்வுலகில்..
துடிக்கும் இதயம் கூட உன்னுடையதாய்
ஆனதடி உன்னை கண்ட பின்பு..
சுவாசிக்கும் காற்றின் ஆழம் கூட
உன் பெயரைச் சொல்லுதடி
உன்னை நேசித்த பின்பு..
இவையெல்லாம் நான் உன்மேல்
கொண்ட காதலின் ஆழமோ
என திகைத்து நின்றேனடி!!!
எந்தன் கண்மணியே!!!-
கனவின் காதலன்..
நீ என்னுடன் இருக்கும்
ஒவ்வொரு நொடிப்பொழுதும்
உன்னை ரசிக்கும்
ரசிகனாய் மடியில்
வீழ்ந்து கிடப்பேனடி
உன் அழகை வர்ணிக்கும் கற்சிலையாய்...
-
நினைவின் தேடல்....
நம்மை நினைக்கின்ற
மனிதர்கள் எங்கெங்கோ
இருப்பதால் என்னவோ
மனதின் சித்திரம்
ஓவியங்களாக
முழுமையடைகின்றன!!
-
பொய்க்கனவு...
நீ என்னை
விட்டுச்சென்ற இடத்திலேயே தனிமையில் நின்றேன்..
என்னை நீ விட்டுச்சென்ற
இடத்திலேயே வந்து கூட்டிச்செல்வாய் என்ற "நம்பிக்கையுடன்"!!-
கனவின் காதல்...
உன் கை கோர்க்கும்
தருணம்வரை காத்திருப்பேன்..
உன் மனம் என்ற கோவிலின்
"வாயிற்காவலனாய்"!!!
-
திரும்பிவரும் உறவு கூட
உன்னை திரும்பி
பார்க்காமல் நடக்கும்..
அவர்களுக்கான இடத்தில்
நீ நிற்காத பொழுது!!
-💜த.சதீஷ் குமார்💜-
அடுத்தவரின் அன்பை
எதிர்பார்த்தால் அங்கு
நீ நிற்பாய்
"ஏமாளி" என்ற
பெயருடன்!!!!!!
-
இப்போது இருப்பவை
உன்னுடன் என்றும் இருக்கும்
என எண்ணினால் இந்த
உலகத்தின் முதல் முட்டாள்
நீதான் நீ மட்டும் தான்!!!!!-