கிடைக்காதது
இப்பொழுது பிடிக்காதவையாக
மாறியது!-
Facebook id:naan_kavingan_illai
பெரிதாய் தேடியவனுக்கும் இன்றளவும் கிடைக்கவில்லை
மனிதாபிமானமாக
அவ்வப்பபொழுது
வந்துவிட்டுச் செல்லும்!!!
-
அன்பு பொழிந்த மழை நீர் நீயாய்!
அச்சம் கொட்டும் மழை நீரை
பொழிந்தது ஏனோ வீணாய்!
குளத்தில் குளிக்காவா
குடையோடு வந்திர்கள்!
குளத்தின் மீனிருக்கு
பொறியாவது தந்திர்களா!
அழது மீனின் அழுக்கு
கடலோடு சேர்ந்துவிட்டது!
ஒருப் பொழுதினும்
குடித்து விடாதிர்கள்
உங்கள் நன்மைக்கே!
-
நானும் மெளனமும்
பேசிக் கொண்டிருப்போம்!
என் தவறுகளை ரகசியமாய்
சொல்ல யாரும்
இல்லை என்பதினால்-
யார் யாரோ வரக்கூடும்
நண்மை தீமை இவ்விரண்டில்
ஒன்றை தந்துவிடக்கூடும்!
இவ்விரண்டை கையாள்வதே
இறைவன் நமக்கு தரும்
பாடம்!-
வாடகை கேட்க வீட்டுகாரர்
வந்து வந்துவிட்டார்
என நினைத்துவிட்டது போலும்
பார்த்தவுடன் ஓடி ஒளிந்து கொண்டது
என் வீட்டில் குஞ்சு பொறித்த
அணில் குஞ்சு!
எப்படி சொல்வேன்?
நான் இல்லை என்று!
நாளைதான் வருவார் நான் எங்கே ஓடி ஒளிவது!!!
-