18 JAN 2019 AT 15:49

"இருதலைக் கொள்ளி எறும்பு"

இருதலைக் கொள்ளி எறும்பு
எத்திசை நோக்கி செல்வதென
தவித்திருக்கும் முடிவு ஒன்று
தெளிவாக எடுக்காத வரை!

தெளிந்து தெளிவாகி உறுதியாக
முடிவெடுத்த பின்னோ அதே
இருதலைக் கொள்ளி எறும்பின்
இருதலை ஒர்திசை நோக்கும்!

எதுவேண்டுமென புத்தி தெளிந்திட
திடமனது வேண்டாததை புறம்தள்ள
இருள் பாதையிலும் ஒளிகாட்டி
வெளிச்சம் பரவிடுமே வழிகாட்டி!

- Santhi Anandan